ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ரயிலில் தூங்க கட்டுப்பாடு! 8 மணி நேரம் மட்டுமே தூங்க ...

ரயிலில் தூங்க கட்டுப்பாடு!
ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகள் 8 மணி நேரம் மட்டுமே தூங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் படுக்கை வசதியுள்ள இருக்கையில் சில பயணிகள் முன்னதாகவே தூங்க செல்வதால் மற்ற பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகின்றது. எனவே முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகள் தூங்கும் நேரத்தை குறைத்து ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்த பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என 8 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை பயணிகள் 9 மணி நேரம், அதாவது, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்த்தக்கது. நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், “ படுக்கை வசதி தொடர்பாக ஏற்கனவே விதிகள் உள்ளது. தற்போது, அதனைத் தெளிவுபடுத்துவதற்காக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. படுக்கை வசதி கொண்ட ரயிலில் கீழ் படுக்கையைப் பதிவு செய்தவர்கள் உடனடியாக படுத்து கொள்வதால், நடு வரிசை படுக்கை மற்றும் மேல் படுக்கைக்கு செல்பவர்களும் சீக்கிரம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, பயணிகள் தூங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் படுக்கையை முன்பதிவு செய்தவர்கள், கீழ் படுக்கையை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை உரிமை கொண்டாட முடியாது எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது தவிர்க்கப்படும். படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து ரயில்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்” எனக் கூறியுள்ளார்.
இந்த உத்தரவு தொடர்பான சுற்றறிக்கை கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரயில்வே துறைக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக