சனி, 9 செப்டம்பர், 2017

தினகரனுக்கு அமித் ஷா கடும் எச்சரிக்கை .... 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்த ---- திரும்பப் பெற மோதல் நடக்கிறது

நாங்கள் விரும்பாத எதுவும் உங்களால் தமிழக அரசியலில் ஏற்படும் என்றால் அதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என கடுமையான குரலில் டி.டி.வி. தினகரனை எச்சரித்திருக்கிறார் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா'' என்கிறது டெல்லி வட்டாரம்.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களுக்கு என தனி புத்தகம் வைத்து, வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார் தலைமைக் கழக ஊழியரான மகாலிங்கம். சசிகலாவுக்கு மிக நெருக்கமான மகாலிங்கம் கொடுத்த தகவல்படி, எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் 85 எம்.எல்.ஏ.க்கள்தான் கலந்து கொண்டனர் என்கிறார்கள். இல்லை 105 பேர் கலந்து கொண்டனர் என பொள்ளாச்சி ஜெயராமனும் 109 பேர் கலந்து கொண்டனர் என ஜெயக்குமாரும் கூறினார்கள்.


ஈரோட்டில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், ""135 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு எனக்குதான்'' என பெருமையடித்துக் கொண்டார் எடப்பாடி. கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்களிடம் இதுபற்றி கேட்டோம். ""மொத்தத்தில் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் புரியவில்லை. பெரும்பான்மையானோர் கலந்து கொண்டதாக கூறினார்கள். எடப்பாடிதான் ;
;தங்கமணி, வேலுமணி, வீரமணி, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய 6 அமைச்சர்கள் அணிதான் எடப்பாடியின் ஆக்ஷன் டீம். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தேவையானதை செய்ததோடு, ""இதுபோல உங்களுக்கு மாதா மாதம் கிடைக்கும். இதற்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார் என இந்த ஆறு பேர் கொண்ட அணி உறுதி செய்துதான் எம்.எல்.ஏ.க்களை எடப்பாடியின் கூட்டத்துக்கு வரவழைத்தது. அதே நேரம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தையும் ஆறு பேர் அணி தொடர்பு கொண்டது. அதில் மிகவும் சீனியரான ஜக்கையன் குடும்பத்தின் மீதான கண்காணிப்பை தினகரன் டீம் குறைத்திருப்பதை கண்டுபிடித்து அவரது குடும்பத்தை மடக்கிப் பிடித்தது எடப்பாடியின் டீம்.

;தினகரன் வியாழனன்று கவர்னரை சந்தித்த அதே நேரத்தில் ஜக்கையனை சபாநாயகரை சந்திக்க வைப்பதில் வெற்றி பெற்றது எடப்பாடி டீம். ஜக்கையனின் இந்தத் தாவல் தினகரன் வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்தது. அடுத்த அதிரடியாக பெரியகுளம் கதிர்காமுவுக்கு வலைவீசி, தயார் நிலையில் வைத்திருக்கிறது எடப்பாடி முகாம். சளைக்காத தினகரன் முகாமோ, ""எடப்பாடியை மாற்றும்படி ஏற்கனவே மனு கொடுத்த 19 பேரில் ஒருவர் போனார். அவருக்கு பதில் மூவரை புதிதாக மனு கொடுக்க வைத்துள்ளோம்'' என்கிறார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல்.

;தினகரனிடம் முகம் கொடுத்து பேசவில்லை கவர்னர் வித்யாசாகர் ராவ். "இது உட்கட்சி பிரச்சினை இல்லை. முதல்வர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும்' என டி.டி.வி. தினகரனும், அதற்கான சட்ட பாயிண்டுகளை வழக்கறிஞரும் எம்.பி.யுமான நவநீதகிருஷ்ணனும் விளக்கிச் சொல்ல, ""இன்னும் இரண்டு நாட்களில் எனது முடிவை சொல்கிறேன்'' என்பதுதான் கவர்னரின் பதிலாக இருந்தது.

;தமிழக நிலவரம் குறித்து மத்திய உளவுத்துறை டெல்லிக்கு ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. "
தினகரனுக்கும் எடப்பாடிக்கும் நடக்கும் சண்டை முதல்வர் பதவிக்கான சண்டை அல்ல. கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட காலத்தில் ஓ.பி., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகியோர் அடங்கிய ஐவர் அணி சாம்ராஜ்ஜியம் நடத்தியது. அதைப் பற்றி தெரிந்தவுடன் ஜெ. நடவடிக்கை எடுத்தார். அதில் எடப்பாடிக்கு மட்டும் சிறப்பு சலுகை தரப்பட்டது.

கிட்டத்தட்ட 70 ஆயிரம் சி மதிப்புள்ள அந்த சிறப்பு சலுகையை திரும்பப் பெற மோதல் நடக்கிறது. ஓ.பி.எஸ். இந்த சண்டையில் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க. அம்மா அணிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை கூட வாபஸ் பெறவில்லை. எடப்பாடியுடன் மோதிய தினகரன், மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்தபோது தி.மு.க.வைத் தொடர்பு கொண்டு பேசினார்'' என்கிற அந்த ரிப்போர்ட்டை பற்றி தினகரனிடம் அமித்ஷா விசாரித்துள்ளார். "நாங்கள் தி.மு.க.வுடன் பேசவில்லை' என்றார் தினகரன்.

எடப்பாடி முதல்வர், சசிகலா பொதுச் செயலாளர் என காம்ப்ரமைஸ் பேசி வரும் அமித்ஷாவின் ஒற்றுமை முயற்சிக்கு தினகரன் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமித்ஷா தினகரனை எச்சரித்துள்ளார் என்கிறது டெல்லி வட்டாரம். ஆட்சி நாற்காலி ஆடும் நிலையிலும் டெல்லி தெம்பில் நிம்மதியாக இருக்கிறார் மைனாரிட்டி அரசு நடத்தும் எடப்பாடி."-தாமோதரன் பிரகாஷ்</  நேக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக