திங்கள், 25 செப்டம்பர், 2017

தமிழகத்தின் மின்சார மேலாண்மை 70 - 80 களிலேயே சாதனை! ... பின்தங்கிய மீதி இந்திய மின்சார மேலாண்மை

Suriya Moorthy :தமிழக சராசரியை எடுத்துக்கொண்டால், 98.3% வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது, தமிழகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைவு அப்படியே இருந்தாலும் வசதியும், வாய்ப்பும் எல்லோருக்கும் போய் சேரும் வகையிலான ஒரு கட்டமைப்பு (system) இங்கே இருக்கிறது. (பீகாரின் சராசரி 58.6%, உத்திரப்பிரதேசம் 70.9%), 1989களிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தார் கலைஞர், இந்த திட்டமெல்லாம் 69-71 காலகட்டங்களிலேயே தமிழகத்தில் பேசப்பட்டது.. அடிப்படையில் தமிழகத்தின் இந்த வளர்ச்சியை இந்தியாவின் பல மாநிலங்கள் கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாது
சவ்பாக்ய யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர்.. 2018க்குள் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது திட்டத்தின் இலக்கு நல்ல இலக்கு மகிழ்ச்சி.. சாதக பதகங்கள் முழுமையான அறிவிப்பையும் பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் படித்த பின்பு தெரியவரும் ஆனால் சொல்லும் நோக்கத்தை வரவேற்கிறேன் .
ஒரே தகவலை மட்டும் தமிழகம் இந்த நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டும், "இந்திய அளவில் 96% கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியதில் தேசிய சராசரி 69% மட்டுமே, இந்த தகவல் சொல்லும் வெளிப்படையான செய்தி கிராமங்களுக்கு மின்சாரம் போய்விட்டாலும் அங்குள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே அது பயன்படுகிறது,
இந்த புள்ளி விவரம் இந்தியாவின் கிராமங்களில் உள்ள மிகமோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அப்பட்டமாக படம்பிடித்து காட்டுகிறது"

.
அடுத்ததாக தமிழக சராசரியை எடுத்துக்கொண்டால், 98.3% வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது, இந்த புள்ளிவிவரம் சொல்லும் ஒரு செய்தி தமிழகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறைவு அப்படியே இருந்தாலும் வசதியும், வாய்ப்பும் எல்லோருக்கும் போய் சேரும் வகையிலான ஒரு கட்டமைப்பு (system) இங்கே இருக்கிறது. (பீகாரின் சராசரி 58.6%, உத்திரப்பிரதேசம் 70.9%), 1989களிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தார் கலைஞர், இந்த திட்டமெல்லாம் 69-71 காலகட்டங்களிலேயே தமிழகத்தில் பேசப்பட்டது.. அடிப்படையில் தமிழகத்தின் இந்த வளர்ச்சியை இந்தியாவின் பல மாநிலங்கள் கனவில்கூட நினைத்துப்பார்க்க முடியாது
.
தேசிய சராசரி 69% & தமிழக சராசரி 98.3%.. இதற்கு பெயர் தான் முற்போக்கு, வளர்ச்சி, போட்டோசாப் செய்வதல்ல வளர்ச்சி.. இந்திய என்கிற தேசம் சிந்திக்க தொடங்கும் முன்பே அதன் அங்கமான தமிழ்நாடு செய்து முடித்திருக்கும்
.
சூரியமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக