செவ்வாய், 19 செப்டம்பர், 2017

சி.ஆர்.சரஸ்வதி : 30 கோடி வரை பேரம் பேசியபோது கூட 18 பேரும் விலைபோகவில்லை.

தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது குறித்துப் பேசினோம்.: சபாநாயகர், கொறடா ஆகியோர் சட்டமன்றத்திற்குள் செய்யப்படும் நடவடிக்கைக்குத்தான் உரிமை மீறல் அவர்கள் எடுக்க முடியும். சட்டமன்றத்திற்குள் பன்னீர்செல்வம் அணியினர் 12 பேர் எதிர்த்து வாக்களித்தனர். சட்டப்படி அதிமுகவில் அன்று அவர்கள் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. ஆட்சிக்கு எதிராக அதிமுக உறுப்பினர்களாக இருந்து எதிர்த்து வாக்களித்தனர். சட்டமன்றத்தில் வாக்களிக்காமல் வெளியே போனாலும் நடவடிக்கை எடுக்கலாம். பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என ஆளுநரை யார் வேண்டுமானாலும் போய் பார்க்கலாம். அதுவும் அதிமுக எம்எல்ஏக்கள்தான் ஆளுநரை சந்தித்துள்ளனர். அவர்கள் 18 பேரும் அதிமுகவில் இருந்து போகவில்லை. வேறு கட்சியிலும் சேரவில்லை. தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகம் மீறப்பட்டுள்ளது. ஜனநாயகப் படுகொலை என்றே சொல்லலாம்.


பேரும் கர்நாடக மாநிலத்தில் இருக்கிறார்கள். கூப்பிட்டும் வரவில்லை என்றால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிய வருகிறது. கர்நாடகாவுக்கே தமிழக போலீசார் சென்று, அவர்களை மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக கர்நாடகா போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்களை மிரட்டுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள், '25 கோடி வேணுமா, 30 கோடி வேணுமா, பணம் வாங்கிக்கொள்ளுங்கள், சப்போர்ட்  பண்ணுங்கள் இல்லையென்றால் வழக்கு போட்டு ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமை வரும்' என மிரட்டியுள்ளனர். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கவில்லையே. இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி வெளியே வரமுடியும். அது மட்டுமல்லாமல் ஆளுநர் இவ்வளவு காலதாமதம் பண்ணக்கூடாது. நாங்கள் முதல் முறையாக ஆட்சி அமைக்க கோரியபோது எத்தனை நாள் காத்திருந்தோம்?
அதே ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது உடனே பதவியேற்க வைத்தார் ஆளுநர். அதேபோல 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்து எத்தனை நாள் ஆனது?
அதனைத் தொடர்ந்து துணைப்பொதுச்செயலாளர் தினகரன் மனு கொடுத்து எத்தனை நாள் ஆகிறது. செப்டம்பர் 18ஆம் தேதி வருவதாக இருந்த ஆளுநர், 19ஆம் தேதி வருகிறார். இந்த நிலையில் கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர்.
இதையெல்லாம் பார்க்கும்போது ஆட்சியைத்  தக்க வைக்க எந்த லெவலுக்கும் இறங்க தமிழக அரசு வந்துவிட்டது. ஜனநாயகம், சட்டம் என அனைத்தும் மீறப்பட்டுள்ளது. கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு சென்ற வழக்கு முடியவில்லை. இந்த தகுதி நீக்கம் செல்லாது. இதனை நீதிமன்றத்தில் சந்திப்போம்", என்று ஒரே மூச்சில் கூறி முடித்தார்.

தினகரனும் ஸ்டாலினும் நல்ல பாம்பு, சாரைப்பாம்பு போல பின்னி பிணைந்துள்ளார்கள். பிரிக்க முடியாத உறவாக உள்ளனர். தினகரனை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிக்கவில்லை' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே? :

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஸ்டாலினைப்  பார்த்து வருக, வருக என்றெல்லாம் கூப்பிட்டார் ஓ.பி.எஸ். திமுகவை பொறுத்தவரையில் மிகப்பெரிய எதிர்க்கட்சி. இன்றைக்கு 111 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என ஜெயக்குமார் சொன்னாரா இல்லையா? அப்போது இது மைனாரிட்டி ஆட்சிதானே? மெஜாரிட்டி ஆட்சிக் கிடையாதே. ஒரு எதிர்க்கட்சியாக, மெஜாரிட்டி ஆட்சி இல்லாதபோது அவர்கள் தங்களது நடவடிக்கையை எடுப்பார்கள். திமுக,  அவர்கள் வழியில் செல்கிறார்கள். நாங்கள் முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் கொடுத்தோம்.

திமுகவோ   'ஒரு அமைச்சரே 111 எம்எல்ஏக்கள்தான் என்று சொல்லிவிட்டார். இவர்களுக்கு மெஜாரிட்டி இல்லை, மைனாரிட்டி ஆட்சி' என்று சொல்கிறது. இது எப்படி நாங்களும், அவர்களும் கூட்டணி வைத்துள்ளதாக வரும் ?

ஜெயலலிதாவுக்குத்தான் மக்கள் வாக்களித்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா இரண்டு முறையும், சசிகலா ஒரு முறையும் முதல் அமைச்சராக அமர வைத்தனர். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக சசிகலாதான் உட்கார வைத்தார். மக்கள் உட்கார வைக்கவில்லை. இன்று அவரது பணி சரியில்லை. மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. அம்மா உணவகங்கள் சரியாக இயக்கப்படவில்லை. லேப்டாப், சைக்கிள் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. மக்களே இந்த ஆட்சியை விரும்பவில்லை. எனவே முதல் அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்

அதிமுகவில் சம்மந்தமில்லாத ஒருவரின் கட்டுப்பாட்டில் 18 பேர் சென்றிருப்பது, பொதுக்குழுவை எதிர்த்து வழக்குப்போடுவது, அதிமுகவில் இருந்து விலகி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க விரும்புவது நன்றாக தெரிகிறது என்று கூறுகிறார்களே?:
கடந்த டிசம்பர் மாதம் பொதுக்குழு, செயற்குழு முறைப்படி கூட்டப்பட்டு 3 ஆயிரம் பேர் கையெழுத்துப்போட்டு சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தோம். அதனை ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகியோர் நேரடியாக சென்று சசிகலாவின் காலில் விழுந்து கொடுத்தனர். அந்த காலத்தில் பத்திரிகை செய்தியாக தெரியும். இந்த காலத்தில் எல்லோருடைய கையில் இருக்கும் செல்போனில் வீடியோவாக ஓடிக்கொண்டிருக்கிறது காலில் விழுந்த காட்சி. பொதுச்செயலாளராக சசிகலா இதுவரை இருக்கிறார். தேர்தல் ஆணையத்தில் கொடுத்திருக்கக் கூடிய அபிடவிட்டில் அதிமுக அம்மா அணி சார்பில் 7 லட்சம் அபிடவிட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என கூறப்பட்டுள்ளது.

இன்னைக்கு சசிகலாவை ஏற்க முடியாது என்றவர்கள், அன்றைக்கு ஏன் அவரை ஏற்றுக்கொண்டீர்கள்?
ஜெயலலிதா இருந்த இடத்தில் வேறு யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று வெளிநடப்பு செய்திருக்கலாம். ராஜினாமா செய்திருக்கலாம். டிடிவி தினகரனை அறிவித்தபோது இந்தக்  குரலை எழுப்பியிருக்கலாம். ஆர்.கே. நகரில் வேட்பாளராக போட்டியிட்டபோது புறக்கணித்திருக்கலாம். முதலமைச்சர் உட்பட அன்று வந்து வாக்கு கேட்கவில்லையா, தேர்தல் பணி செய்யவில்லையா? இன்றைக்கு அவர்கள் கட்சியும், ஆட்சியையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட  இயக்கம். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம்.

அந்தஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சபாநாயகர் விதிகளுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுத்திருப்பார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளாரே?
கவர்னரின் நடவடிக்கைக்கு என்ன சொல்லப்போகிறார்? ஓ.பி.எஸ். ஈ.பி .எஸ். இணைகிறார்கள் என்றவுடன் சென்னைக்கு விரைந்து வந்து சேர்த்து வைக்கிறார். 18 பேர் கொடுத்த கடிதத்திற்கு காலதாமதம் செய்கிறார். அவர்களிடம் காட்டிய அவசரத்தை ஏன் எங்களிடம் காட்டவில்லை? இதற்கு சகோதரி தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளிக்க வேண்டும்.>தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் பெரும்பாலானோர் புதியவர்கள். அவர்களின் மனநிலை எப்படி உள்ளது? ஏன் டிடிவி தினகரன் பக்கம் வந்தோம் என நினைக்கிறார்களா
பண பலம், அதிகார பலம் உள்ள அரசை எதிர்த்து போராடுகிறோம். இவையெல்லாம் வரும் என தெரிந்துதான் போராடுகிறோம். 30 கோடி வரை பேரம் பேசியபோது கூட 18 பேரும் விலைபோகவில்லை. பணத்திற்கு மயங்கவில்லை. ஜெயலலிதாவின் அரசு வேண்டும். கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்றுதான் 18 பேரும் இருந்தார்கள். பதவி போனதால் அவர்கள் வருத்தப்படவில்லை. நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.-வே.ராஜவேல் நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக