புதன், 13 செப்டம்பர், 2017

20கோடி பணம் கொடுப்பதாக போலீசார் பேரம்: தங்க தமிழ்செல்வன் பேட்டி!

நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வந்த தமிழக போலீஸ் டி.எஸ்.பி.வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் இவரும், உங்களுக்கு ரூ.20 கோடி பணம் தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராக உள்ளனர். நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை ஆதரிக்க வேண்டும். இல்லையானால் உங்கள் மீது பல வழக்குகள் பாயும் என எங்களை மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரை பெற்றுள்ள சுண்டிக்குப்பா போலீசார், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்த பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த எம்.எல்.ஏக்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் செந்தில் பாலாஜி இருவமும் செய்தியாளர்களிடம் பேசும் போது, மெஜாரிட்டி இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசை கவர்னர் உடனே கலைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசை கலைக்க கோரிக்கை வைப்போம். இவ்வாறு கூறியுள்ளனர்.nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக