செவ்வாய், 26 செப்டம்பர், 2017

2016 october 1 ஆம் தேதியில் இருந்து ஜெயலலிதா மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது நிருபணம்?


சாய் லட்சுமிகாந்த் : நாயோ, நரியோ, பன்றியோ ஏன் சிங்கமே இறந்தாலும் கைவிடப்பட்ட உடலை கழுகு(vulture) கொத்தி தின்று பசியாருமாம்.. இப்போது தமிழகத்தில் நடக்கும் காவி பயங்கரவாத ஆட்சியையும் தினகரன் சொன்னதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த கழுகு யார் என ஊகிக்க முடியும்.

Sivasankaran Saravanan : தினகரன் சொல்வது உண்மை என்றால், பிறகு அந்த நாட்களில் தமிழ்நாட்டை தங்கள் கன்ட்ரோலில் வைத்திருந்தது யார்? ஏனென்றால் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை, சசிகலா குடும்பமும் இல்லை என்றால் பிறகு யார் நாட்டாமை செய்தது? எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்தது யார்? ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. ஜெயலலிதா வை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றியுள்ளனர்..! கலைஞர், சிகிச்சை பெறுகிற புகைப்படம் கேட்டபோதே நாம் சுதாகரித்து இருக்கனும். அட்லீஸ்ட் ஜெயலலிதா வின் உண்மை விசுவாசிகளாவது உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக்கவேண்டும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக