திங்கள், 4 செப்டம்பர், 2017

ரஜினிரகு +2 mark 1190 : cut off 199.50 : NEET 200/700 no medical seat.. இன்னொரு மாணவன் இறப்பதற்குள்

juliet.jenifar.: ரஜினிரகு   (+2 mark 1190 : cut off 199.50 : NEET 200/700 no medical seat)
பத்தாம் வகுப்பு தேர்வில் 497-மதிப்பெண் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். தன் மகன் நிச்சயம் மருத்துவராக வருவான் என்ற நம்பிக்கையில், இருபது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தன்னுடைய வீட்டுக்கு கதவு வைக்காமலும், நிலத்துக்கு சிமெண்டு கான்கிரீட் கூட போடாமுடியாமல் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குழந்தைகளின் கல்விக்காவே செலவு செய்து வந்துள்ளார் வடிவேலு.
வடிவேலின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ரஜினிரகு 1190- மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கலந்தாய்வுக்கான கட் ஆப்பில் 199.50% எடுத்துள்ளார். தமிழக கிராமப்புற மாணவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்ற நோக்கில், எதிர்பாராத நேரத்தில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வில் மாணவர் ரஜினிரகு 200-மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால், வடிவேல் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக கண்ட கனவு, வெறும் கனவாகவே போனது.
இதைத்தொடர்ந்து, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கி கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் சட்டமும் செயல்வடிவம் பெற முடியாமல் உள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து விசைத்தறி நெசவு செய்து வருகிறார் மாணவர் ரஜினிரகு.
இன்னொரு மாணவன் இறப்பதற்குள் விழிது ஏழு தமிழ் சமூகமே....
Frm : wp, Adv. Dhamayanthy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக