வியாழன், 21 செப்டம்பர், 2017

18 MLA .. ஆளுநர் - எடப்பாடி வாக்குவாதம்? : என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்ல? அருண் ஜெட்லி சொன்னார்.. அவர் சொன்னார் இவர் சொன்னார் ...


மின்னம்பலம் : நம்பத்தகுந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஒரு நண்பர். ‘நான் சொன்னேன்னு தெரிய வேண்டாம். அதான் புது நம்பர்ல இருந்து கால் பண்றேன்!’ சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு இணைப்பை டிஸ்கனெக்ட் செய்தார் அந்த நண்பர். அவர் சொன்னது இதுதான்...டிஜிட்டல் திண்ணை:  ஆட்சி சஸ்பெண்ட்? ஆளுனர் கோபம்!“நேற்று நீதிமன்ற நிகழ்வுகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார் ஆளுனர் வித்யாசாகர் ராவ். அதன் பிறகு இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது முதல்வரிடம், ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மீது எதுக்காக நடவடிக்கை எடுத்தீங்க. ஒருவார்த்தை சொல்லி இருக்கலாமே..இப்போ எவ்வளவு சிக்கல் வந்துடுச்சு பாருங்க..’ என்று கோபமாக கேட்டாராம் ஆளுனர். அதற்கு முதல்வர் பழனிசாமி, ‘நீங்க சொல்றது சரிதான்...ஆனால் எல்லாத்தையும் அருண் ஜெட்லிகிட்ட கேட்டுட்டுதான் செஞ்சோம். அவர் சொன்ன பிறகுதான் இங்கே நடவடிக்கை எடுப்பட்டது. உங்களுக்கு அங்கிருந்து சொல்லிருப்பாங்கன்னு நினைச்சோம். மத்தபடி உங்களுக்கு சொல்லக்கூடாதுன்னு எதுவும் இல்லை...’ எனச் சொன்னாராம்.
அதற்கு ஆளுனர், ‘அவங்க சொல்லுவாங்க.. இவங்க சொல்லுவாங்கன்னு நீங்க எதுக்கு நினைச்சுட்டு இருந்தீங்க.. நீங்களே சொல்லி இருக்கலாமே... நீங்க கூப்பிட்டு நான் எப்போ பேசாமல் இருந்தேன்? அவசரப்பட்டு நீங்க முடிவெடுத்துட்டீங்க. இப்போ எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து என் பெயரை இழுத்துட்டு இருக்காங்க.
நான்தானே எல்லாத்துக்கும் பதில் சொல்லி ஆகணும்? ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள்... இன்னொரு பக்கம் கோர்ட்னு மாறி மாறி கேள்வி கேட்பாங்க.’ என சற்று கடுமையாகவே சொல்லிவிட்டுத்தான் போனை வைத்திருக்கிறார் ஆளுனர்.

அத்துடன் முடிந்துவிடவில்லை. எடப்பாடியுடன் பேசி முடித்த பிறகு, தலைமை செயலரையும் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் ஆளுனர் வித்யாசாகர் ராவ். ‘இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப் போறாங்கனு நீங்களாவது என்னிடம் முன்கூட்டியே சொல்லியிருக்கலாம். இனி அட்மின்ல என்ன ஆக்‌ஷன் எடுப்பதாக இருந்தாலும் என்னோட நாலெட்ஜ் இல்லாமல் செய்யக் கூடாது. மினிஸ்டர்ஸ் சொன்னாலும் சரி.. சீஃப் மினிஸ்டர் சொன்னாலும் சரி... என்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு செய்யுங்க. ’ என்று உத்தரவிட்டிருக்கிறார். மேலும்,முதல்வரிடம் ஆளுனர் போனில் பேசிய தகவல் அதிமுக வட்டாரங்களின் மேல் மட்டத்திலிருந்து லீக் ஆகி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
இதோடு நிற்காமல், தனது ஆந்திர வட்டார நண்பர்களிடம் தமிழக நிலவரம் பற்றி மேலும் சில கருத்துகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறாராம் ஆளுனர். இன்று (செப்டம்பர் 21) மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு குடியரசுத் தலைவர் வருகிறார். மகாராஷ்டிர ஆளுனர் என்ற முறையில் குடியரசுத் தலைவரை வரவேற்க செல்கிறார் வித்யாசாகர் ராவ். அங்கே குடியரசுத் தலைவரை சந்திக்கும்போது, தமிழக அரசியல் நிலவரம் பற்றி விரிவாகப் பேசி, சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்யலாம் என்பதையே தனது ஆலோசனையாக தெரிவிக்க இருப்பதாக, தனது ஆந்திர நண்பர்களிடம் கோடிட்டுக் காட்டியிருக்கிறாராம் ஆளுனர். இந்த தகவலைத்தான் போனில் பேசிய நபர் என்னிடம் சொன்னார்” என்று முடிந்தது வாட்ஸ் அப் வாய்ஸ்.
அதை அப்படியே டவுன்லோடு செய்து அப்டேட் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் கம்போஸ் செய்ய ஆரம்பித்தது.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் சார்ந்திருக்கும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முன்பெல்லாம் சர்வ சாதாரணமாக சந்தித்து வந்தார்கள். ஆனால், இப்போழுதெல்லாம் கவுண்டர் சமுதாயத்து பிரபலங்கள் யார் வந்தாலும் மணிக் கணக்கில் காக்க வைத்துவிடுகிறாராம் பழனிசாமி. ‘அவருதான் முன்பு நம்ம தயவை நம்பி இருந்தாரு. நாமும் அவருக்கு நிறைய உதவி செஞ்சோம். ஆனால், இப்போ பதவி வந்துடுச்சுன்னு நம்மை காக்க வெச்சு அசிங்கப்படுத்துறாரு. அதுவும் போன வாரத்துல நம்ம ஆளு ஒருத்தரு வந்து மணிக்கணக்கா காத்திருந்து கடைசி வரைக்கும் பார்க்கவே இல்லை. நாம என்ன வேலை வெட்டி இல்லாம இருக்கோமா? நமக்கு கௌரவம்தானே முக்கியம்!’ என சொல்லி இருக்கிறார் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த மூத்த பிரமுகர் ஒருவர். ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி மீது இருந்த அதிருப்திகளை எல்லாம் தாண்டி இப்போது, அவரது சமுதாயத்தில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறார் எடப்பாடி என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக