திங்கள், 18 செப்டம்பர், 2017

தந்தை பெரியார் 139-வது ஆண்டு பிறந்த நாள்: தலைவர்கள் மரியாதை!

தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய பகுத்தறிவுப் பகலவன்
தந்தை பெரியாரின் 139ஆவது ஆண்டு பிறந்த நாள் இன்று (17.9.2017) உலகெங்கும் தேசியத் திருநாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியாவில் புதுடில்லி, மும்பை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாநில நகரங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில் திராவிடர் கழகத் தோழர் களால் பட்டி தொட்டியெங்கும் பல்வேறு நல செயல்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.
;இன்று (17.9.2017) காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் தோழர்கள் - தோழியர்கள் புடைசூழ மாலை அணிவித்தார். ;பின்னர் தந்தை பெரியார் நினைவிடத்தில்மலர் வளையம் வைத்து தந்தை பெரியார் விட்டுச்சென்ற இலட்சிய பயணம் தொடரும், மதவெறி சக்திகள், ஜாதி வெறி சக்திகள் தோல்வி அடையும் வரை நமது அறப்போர் கருத்துக் கொள்கைபோர் என்றும் தொடரும் என்று தமிழர் தலைவர் சொன்ன உறுதிமொழி கழகத் தோழர் - தோழியர்கள் சொல்லி உறுதி ஏற்கப்பட்டது. அம்மா சிலை, நினைவிடத்தில் மரியாதை: முன்னதாக வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள்- தோழியர்கள் ஊர்வலமாக சென்று கழக மகளிரணி சார்பில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதே போன்று அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் தமிழர் தலைவர் முன்னிலையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாளையொட்டி இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும், நினைவிடத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முக்கிய நிர்வாகி சி.மகேந்திரன் தலைமையில் தோழர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.<">விடுதலை சிறுத்தைகள்: தமிழர் தலைவருடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது தோழர்களுடன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கம்: அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செயல் தலைவர் ஜெ.பார்த்தசாரதி (ஆசிரியர், வாய்ஸ் ஆப் ஓபிசி), துணைப் பொதுச்செயலாளர் எம்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் (வாய்ஸ் ஆப் பரோடா) துணைப் பொருளாளர் எ.ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), எஸ்.முருகன் (செயலாளர், சிபிசிஎல்), எம் இளங்கோவன் (அய்அய்டி), செல்வி கிருஷ்ணவேணி பிராந்திய செயலாளர் பரோடா வங்கி, சத்தியவதி எஸ்.சுரேஷ் (செயலாளர், ஆவடி டாங்க் பாக்டரி மற்றும் ஓபிசி, ஏஅய்ஓபிசி உறுப்பினர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.<>திமுக சென்னை முன்னாள் மேயர் சா.கணேசன், திவாகர் மற்றும் தோழர்கள் பெரியார் சிலைக்கும், பெரியார் நினைவிடத்திலும் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் இயக்க சமூக நீதிப் போராளி திண்டிவனம் சிறீராமுலு அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மரக்கன்று நட்டனர்: தந்தை பெரியார் அவர்களின் 139ஆவது ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக இந்த ஆண்டில் 1,39,000 மரக்கன்றுகளை நடும் திட்டம் தமிழர் தலைவரால் அறிவிக்கப்பட்டதின் தொடர்ச்சியாக பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சி.மகேந்திரன், தின்டிவனம் சிறீராமுலு, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப் பினர் விஜயதாரணி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.<">பெரியார் பன்னாட்டு மய்யத்தின், ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசி ரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அவர்கள் தமது ஏழு மாணவர்களுடன் பெரி யார் திடலுக்கு வருகை தந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகளை நட்டார்.

தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும், நினைவிடத் திலும் மரியாதை செலுத்தும் நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் த.வீர சேகரன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திருமதி மோகனா அம்மையார், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, மேனாள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீனாட்சிசுந்தரம், முனைவர் ந.க.மங்களமுருகேசன், பேராசிரியர் அய்யாசாமி, பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கர், ஆடிட்டர் இராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உ.பலராமன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், கவிஞர் கண்மதியன், கோ.ஒளிவண்ணன், நல்லினி, புலவர் பா.வீரமணி, டி.கே.எஸ்.கலைவாணன், சிங்கை பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை: தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கும், நினைவிடத் திலும், மணியம்மையார் சிலைக்கும் மற்றும் அவருடைய நினைவிடத்திலும் பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் சத்தியநாராயணன், பொருளாளர் மா.சேரன் மற்றும் நிர்வாகிகள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் அதன் மேலாளர் குண சேகரன் தலைமையில் பணியாளர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். திராவிடன் நிதி பொது மேலாளர் அருள்செல்வன் தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரியார் திடல் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். புதுமை இலக்கிய தென்றல் அமைப்பின் சார்பில் வழக்குரைஞர் வீரமர்த்தினி தென்றல் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

;தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சிகள்: தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி இன்று (17.9.2017) சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்க தொடக்கத்தில் மாணவர்களின்  பல்வேறு அய்ய வினாக்களுக்கு விகடன் இதழின் ஆசிரியர் திருமாவேலன் விளக்கமளிக்கின்ற தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை மய்யக் கருத்தாகக் கொண்ட விவாத அரங்க நிகழ்வாக குறும்படம் ஷிஷீநீவீஷீ ஜிணீறீளீ திரையிடப்பட்டது. தந்தை பெரியார் சிந்தனைகள், கொள்கை விளக்கங்கள், இன்றளவும் தந்தை பெரியாரின் தேவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக குறும்படம் அமைந்தது."

நீட் ஆபத்தை விளக்கிய கலை நிகழ்ச்சி: கருத்தரங்கத்தின் தொடக்க நிகழ்வாக, நீட் தேர்வு உள்ளிட்டவைகளின் மூலமாக மாணவர்கள் படும் அவலநிலைகளை எடுத்துக்காட்டி கலைத்துறை அமைப்பாளர் செ.கனகா குழுவினர் வழங்கிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

மகளிர் கருத்தரங்கம்: வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்றார். சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி தலைமையில் ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக பேராசிரியர், பெரியார் பன்னாட்டு மய்யம் ஜெர்மனி கிளைத் தலைவர் டாக்டர் உல்ரிகே நிக்லஸ் தொடக்க உரையாற்றினார்.

கல்வியைப் பறிக்கும் நீட்டை நாட்டை விட்டு விரட்டுவோம் எனும் தலைப்பில் காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, மக்களைக் கொல்லும் மதவெறியை  நாட்டை விட்டு விரட்டுவோம் எனும் தலைப்பில்   இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் தோழர் பாலபாரதி, ஜாதி ஆணவக்கொலையை  நாட்டை விட்டு விரட்டுவோம்  எனும் தலைப்பில் புதிய குரல் நிறுவனர், எழுத்தாளர் தோழர் ஓவியா, சமூக அநீதியை நாட்டை விட்டு விரட்டுவோம் எனும் தலைப்பில் வி.கே.ஆர்.பெரியார்செல்வி ஆகியோர் பல்வேறு தகவல்களை எடுத்துக்காட்டி கருத்தரங்க உரையாற்றினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் கருத்தரங்க நிறைவுரையாற்றினார். கருத்தரங்க முடிவில் கும்மிடிப்பூண்டி மகளிர் பாசறை செயலாளர் பொன்னேரி செல்வி நன்றியுரையாற்றினார். தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் மகிழ்வையொட்டி பேராசிரியர் திருக்குறள் பாசுகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயானடை அணிவித்தார். தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாளில் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கில் மகளிர்  ஏராளமானவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக