Mathi
o Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் 2004-
ல் கைது செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி அப்போது போலீஸ் கஸ்டடியில் கொடுத்த வாக்குமூல வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சி சங்கர மடத்துக்கு எதிராக தமிழக அரசுக்கு புகார் மனு கொடுத்தவர் சங்கரராமன். அவர் 2004-ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது செய்யப்பட்டார். பின்னர் 2013-ம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விடுதலையானார்.
2004-ம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது படுத்தபடியே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் நடைபெற்ற விசாரணை வீடியோவை ரிபப்ளிக் டிவி இன்று வெளியிட்டது. அதில் போலீசார் கேட்கிற கேள்விகளுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த பதில்கள்:
பொறுமை இழந்த கிருஷ்ணன் சிசுபாலன் கதையை சொல்றேன்.. 99 முறை ஹம்சன் சிசுபாலனை தொந்தரவு செய்தான்...ஆனால் 100வது முறை பொறுமை இழந்த கிருஷ்ணன் தன்னுடைய சக்கராயுதத்தால் ஹம்சனின் தலையை கொய்தார்.
நானும் பொறுமையாக இருந்தேன் நானும் பொறுமையாக இருந்தேன்
நானும் 99 முறை அவமானங்களைப் பொறுத்துக்கிட்டேன்...100வது அவமானத்தைப் பொறுக்க முடியலை.. எல்லாத்துக்கும் அளவு உண்டு.. பொறுமை உண்டு. கிருஷ்ணரும் 99 முறை பொறுமையாக இருந்து 100-வது முறை பொறுமை இழந்தார்.
கிரிமினல் இந்து கடவுள்கள் கிரிமினல் இந்து கடவுள்கள்
4 இந்துக் கடவுள்களை எடுத்துகிட்டீங்கன்னா அதுல ஒன்னு கிரிமினல்தான்... சில நேரங்களில் எல்லா கடவுள்களுமே தவறு செய்தவர்களாகத்தான் இருப்பாங்க...
சாமிகள் கொலை செய்யலையா? சாமிகள் கொலை செய்யலையா? கிருஷ்ணன் கொலை செய்யலை? கிருஷ்ணன், கொலை செய்ய மக்களை தூண்டலையா? துர்க்கை எத்தனை பேர கொன்றிருக்காங்க? விநாயகரும் கூட கொன்றிருக்கார்? எல்லா சாமியும் கிரிமினல் எல்லா சாமியும் கிரிமினல் எல்லா இந்து கடவுள்களுமே கிரிமினல்கள்தான்.. அவங்களை நாம் கும்பிடுறது இல்லையா? நம்பிக்கை காரணமா சாமியை கும்பிடுறோம்.
மகாமகத்துல 120 பேர் செத்தாங்க... நானும் அந்த பக்கம்தான் நின்னுகிட்டு இருந்தேன்... சசிகலாவுக்கு ஜெயலலிதா தண்ணீர் ஊற்றினாங்க.. ஹெலிகாப்டர்ல பூவெல்லாம் தூவுனாங்க.. அந்த நெரிசலில் குழந்தைங்க கூட செத்தாங்க.. ஆனா இதை அந்தம்மா கிட்ட சொல்ல முடியுமா? அவங்க ஆட்சி நடந்துகிட்டு இருந்துச்சு... இதையெல்லாம் எழுதினா கொன்னுடுவாங்க..
தாதா அப்பு தாதா அப்பு
கிருஷ்ணசாமி(தாதா அப்பு)யை ரவிசுப்பிரமணியம்தான் அறிமுகம் செய்து வைத்தாரு.. அவரு எப்பவும் 10 பேருடன்தான் வருவாரு... கிருஷ்ணாசாமிகிட்ட நான் அவ்வளவா பேசினது இல்லை.
எல்லா போலீஸ் அதிகாரிகளும் என்னை வந்து பார்த்து ஆசீர்வாதம் வாங்கியிருக்காங்க.. எல்லா போலீஸ் அதிகாரிகளும் என்னுடன் வந்து போட்டோ எடுத்டுகிட்டவங்கதான்... கெட்டபெயருடன் வாழ்வதை காட்டிலும் இறந்துவிடுவதுதான் நல்லது... எல்லாமும் முடிந்துவிட்டது. இவ்வாறு சங்கராச்சாரியின் வாக்குமூல வீடியோவில் பதிவாகி உள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக