மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்தம்பதி
தங்களின் ரூ.100 கோடி சொத்து
மத்திய பிரதேச மாநிலம் நீமுச் எனும் ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரசிங் ரதோர்.
மற்றம் 3 வயது குழந்தையை விட்டுவிட்டு வரும் 23ம் தேதி முதல் துறவு வாழ்க்கையை தொடங்கவுள்ளனர்.
சிமெண்ட் தொழிற் சாலைகளுக்கு சாக்கு தயாரித்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கோடீசுவரரான இவரது ஒரே மகன் சுமித் ரதோர் (வயது35).
லண்டனில் உள்ள கல்லூரியில் ஏற்றுமதி- இறக்குமதி நிர்வாகம் பற்றிய டிப்ளமோ படித்த அவர் 2 ஆண்டுகள் அங்கு பணி புரிந்து வந்தார். பிறகு மத்திய பிரதேசம் திரும்பி இவர் தனது தந்தையின் சாக்கு தயாரிக்கும் நிர்வாகத்தை செய்து வந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் நீமுச் நகரைச் சேர்ந்த பா.ஜ.க. தலைவர் அசோக் சாந்தா லியாவின் மகள் அனாமிகா (வயது34)வுக்கும் திருமணம் நடந்தது. அனாமிகா ராஜஸ் தானில் சிகாரில் உள்ள கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர். துத்தநாகம் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர் திருமணத்துக்கு பிறகு வேலையை விட்டு, விட்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.
சுமித் ரதோர் - அனாமிகா தம்பதிக்கு அபயா என்ற 3 வயது பெண் குழந்தை இருக்கிறாள். இந்த நிலையில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும் தங்கள் மதக் கோட்பாட்டை பின்பற்றி இல்லற வாழ்வைத் துறந்து துறவியாக செல்ல முடிவு செய்தனர்.
முதலில் அவர்கள் துறவியாக இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப வில்லை. என்றாலும் சுமித்தும் அனாமிகாவும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். கடந்த 6 மாதமாக அவர்கள் இருவரும் துறவுக்காக பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வந்தனர்.
கடந்த மாதம் 22-ந்தேதி குஜராத் மாநிலம் சூரத் சென்ற அவர்கள் தாங்கள் துறவி ஆகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அவர்களை சமரசம் செய்ய பெற்றோர் அசோக் சாந்தாலியாவும், ராஜேந்திரசிங் ரதோரும் முயன்றனர். “ரூ.100 கோடி சொத்துக்கு வாரிசான நீ இப்போது துறவறம் மேற் கொள்ள வேண்டாம்” என்று ராஜேந்திர சிங் ரதோர் கெஞ்சினார்.
ஆனால் அந்த சமரசத்தை சுமித்தும் அனாமிகாவும் நிராகரித்து விட்டனர். எனவே அவர்கள் இருவரும் துறவு வாழ்வு மேற்கொள்வது உறுதியாகி விட்டது.
வருகிற 23-ந்தேதி அவர்கள் இருவருக்கும் சூரத்தில் தீட்சை வழங்கப் படுகிறது. அன்று முதல் அவர்களது துறவு வாழ்க்கை தொடங்கும்.
அதுவரை சுமித்- அனாமிகா இருவரும் மவுனத்தை கடைபிடிப்பதாக அறிவித்துள்ளனர். ரூ.100 கோடி சொத்து, 3 வயது குழந்தையை விட்டு விட்டு இளம் வயதில் அவர்கள் துறவியாவது ஜெயின் சமூக மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது மகள் அபயாவை அனாமிகாவின் தந்தை அசோக் சந்தோலியா தனது பொறுப்பில் வளர்க்கப் போவதாக கூறியுள்ளார். மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக