புதன், 13 செப்டம்பர், 2017

தமிழகம் கொடுப்பது 100 ரூ,, திரும்பி வருவது 40 ரூ மட்டுமே! உபி கொடுப்பது 100 ரூ திரும்ப பெறுவதோ 179 ரூபாய்! தெற்கை சுரண்டி வடக்கை வாழவைக்கும் ..

Ravishankar Ayyakkannu: திராவிடக் கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன. அதனால்
தான் தமிழகம் முன்னேறவில்லை என்கிறார்களே?
...உலகிலேயே ஊழல் இல்லாத அரசுகளும் கட்சிகளும் குறைவு. ஊழல் என்பது பணம் சம்பாதிப்பது என்பதைத் தாண்டி பல முறைகளில் இயங்கும். ஆட்சிக்கு வராத கட்சிகள் வேண்டுமானால் தாங்கள் ஊழலே செய்வதில்லை என்று மார் தட்டலாம். எனவே, ஒரு ஆட்சியோ தலைவரோ ஊழல் செய்தால் ஆதாரத்துடன் வழக்கு பதியுங்கள். தண்டனை பெற்றுக் கொடுங்கள். ஆனால், அதைத் தாண்டி குறிப்பிட்ட சில கட்சிகள் மட்டும் ஊழல் கட்சிகளாகச் சித்தரிக்கப்படுவதன் நோக்கம் என்ன? இக்கட்சிகளை வீழ்த்தி யாரைக் கொண்டு வர முனைகிறார்கள்? ஊழல் எதிர் மதவாதம் என்ற சமன்பாட்டின் மோசடி என்ன? மதவாதம் பேசும் கட்சிகளில் ஊழலே இருக்காதா? அதனால், ஊழல் கட்சிகளாகச் சித்தரிக்கப்படுபவை மதவாதத்துக்கு எதிராக இருந்தால் அந்த ஒரு காரணத்துக்காகவே அவற்றை ஆதரிக்கலாம். இங்கு கேள்வி நீங்கள் ஊழல் செய்யாத உத்தமர்களா என்பதில்லை. ஊழலைத் தாண்டி மக்களுக்கு என்ன நன்மை செய்வீர்கள் என்பது தான்.
சரி, திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்கின்றன என்றே வைத்துக் கொள்வோமே!

முதலில், ஊழலால் தமிழகம் முன்னேறவில்லை என்பது வடிகட்டிய பொய்.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பல்வேறு மனிதவள அளவீடுகளில் தமிழகம் முன்னேறி இருக்கிறது.
இரண்டாவது, தமிழகம் நடுவண் அரசுக்குச் செலுத்தும் வரியில் 100 உரூபாய்க்கு 40 உரூபாய் தான் திரும்ப வருகிறது. ஆனால், உத்திரப் பிரதேசத்துக்கோ 100 உரூபாய்க்கு 179 உரூபாய் திரும்ப வருகிறது.
இதில் இருந்து தெரிவது என்ன? தமிழகத்துக்கு நடுவண் அரசு தரும் வரிப் பங்கீட்டை உத்திரப் பிரதேசத்துக்குத் தருவது போல் இன்னும் நான்கு மடங்கு உயர்த்தினால், நாம் இன்னும் நான்கு மடங்கு கூட ஊழல் செய்யலாம். அதே வேளை, இன்னும் நான்கு மடங்கு வளர்ச்சியையும் எட்ட முடியும்.
ஊழலை நியாயப்படுத்துவது எனது நோக்கம் அன்று. ஆனால், அதனைக் காரணம் காட்டி நமக்கு யாரும் விபூதி அடிக்கக் கூடாது. நமக்குக் கிடைக்கிற வருமானத்தை வைத்து, அரசியல் யதார்த்தங்களுக்கு இடையே, நம் மாநிலத் தலைவர்கள் மிகச் சிறந்த ஆட்சியையே தந்து வந்திருக்கிறார்கள்.
யார் சொன்னா? நான் சொல்லலீங்க. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வாங்கிய அமர்த்தியா சென்னே சொல்கிறார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக