திங்கள், 7 ஆகஸ்ட், 2017

டாக்டர் .சுபாஷினி :இவ்வளவு கேவலமாகக் கூட மனிதர்கள் நடந்து கொள்வார்களா?


டாக்டர் சுபாஷினி .(.தமிழ் மரபு அறக்கட்டளை)  கடந்த வாரம் பேஸ்புக் பக்கத்தில் பலர் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ..., காதலர்களை நிர்வாணமாக்கி அவர்களைத் துன்புறுத்தி சாலையில் நடக்க வைத்து ஒரு கிராமமே கோஷமிட்டுக் கொண்டு செல்லும் அக்காட்சி. அது மனதை மிக வேதனைப்படுத்தியது. சிலர் அது பொய்யான தகவல் என்றும், சிலர் அதனைக் கிராமத்து வழக்க தண்டனை என்றும் சிலர் அது கள்ளக் காதலில் ஈடுபட்டதால் கொடுக்கப்பட்டது என்றும், சிலர் அது சாதியைக் காரணம் காட்டி கொடுத்த தண்டனை என்றும் பல செய்திகள் வந்திருந்தன.
நான் வாசித்த ஒரு செய்தி அக்கொடுமையைச் செய்தவர்களைக் காவலதிகாரிகள் பிடித்து விட்டார்கள் என்று தகவல் அளிக்கின்றது.
ஜெய்ப்பூரில் ஒரு கிராமத்தில் அந்தப் பெண்ணுக்குப் பிடிக்காமலேயே அவள் அப்பா 80,000 ரூபாய் வாங்கிக்கொண்டு இவ்வாண்டு ஏப்ரல் 17 திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார். அடுத்த நாளே அந்தக் கிராமத்து இளைஞன் அவளை மீட்டு வந்திருக்கின்றான். அதற்கு அவர்கள் இருவரையும் கிராமத்தார் நிர்வாணமாக்கி, கொடுமைப்படுத்தி அவமானப்படுத்தியிருக்கின்றார்கள்.

இக்கொடுமையை அக்கூட்டத்தில் வீடியோவில் யாரோ எடுத்தது பரவி போலீஸ் கைக்கு எட்டியதால் குற்றம் செய்தோரை இப்போது பிடித்து விட்டதாக ndtv வலைப்பக்கச் செய்தி கூறுகிறது.
இவ்வளவு கேவலமாகக் கூட மனிதர்கள் நடந்து கொள்வார்களா என திகைக்க வைக்கின்றது இச்செய்தி. இது ஒன்று மட்டும்தானா என இணையத்தில் தேடினால், சாதியைக் காரணம் காட்டியும், காதலைக் காரணம் காட்டியும், என இத்தகைய நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்து ஜெய்ப்பூர், மஹாராஷ்டிரா போன்ற பகுதிகளில் நடப்பது தெரிகிறது.
என்று நாகரிகம் பெறுவார்கள் இக்கூட்டத்தினர்..???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக