செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

Kakkoos to Oscar ? ஆஸ்கார் பெறப்போகிறது கக்கூஸ் ஆவணப்படம்?

S P Udayakumaran :கக்கூஸ், சிட்டுக்குருவி...   தங்கை திவ்யா இயக்கியிருக்கும் கக்கூஸ் ஆவணப்படத்தை இன்றுதான் பார்த்தேன். நோபல் பரிசு கொடுக்கப்படவேண்டிய அவருக்கு, பொய் வழக்கையும், கைது நடவடிக்கையையும் பரிசாக வழங்குகின்றன கையாலாகாத நமது அரசுகள். பாழாய்ப்போன நமது சமூகத்தின் சாதிக் கொடுமைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள், துப்புரவுத் தொழிலாளர்கள் சந்திக்கும் அவலங்கள், அவர்கள் வாழ்வில் தாண்டவமாடும் துன்பங்கள், துயரங்கள் - இவற்றை எல்லாம் பார்க்கும்போது, கோபம்தான் கொப்பளிக்கிறது. பீ அள்ள முடியாத நாடு அணுசக்தி வல்லமை பற்றி பீற்றிக்கொள்வது கேவலமானது, அநாகரிகமானது.
அருட்சகோதரி ஜாக்குலின் ஜெயின் எழுதியிருக்கும் புதிய நாவல் "சிட்டுக்குருவி" (திண்டுக்கல்: ஓவியா பதிப்பகம், 2017; 7667557114) இம்மக்களின் வாழ்க்கையைத்தான் படம்பிடித்துக் காட்டுகிறது. வாழ்க்கை அல்ல இது, அர்த்தமற்ற உயிர் தரித்தல். அதைவிட மோசமான துன்பியல் நிகழ்வு. சகோதரி ஜாக்குலின் அவர்களின் புதினம் தங்கை திவ்யாவின் ஆவணப்படம் சொல்வதை இலக்கிய வடிவில் பகர்கிறது. இரண்டு படைப்புக்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்வது நிலைகுலையச் செய்கிறது.  சிறந்த ஆவணப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் மற்றும் கான் போன்ற சரவதேச அங்கீகாரங்களை திவ்யாவின் கக்கூஸ் திரைப்படம் பெறும் என்று பல நாடுகளையும் சேர்ந்த  திரைப்பட ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்

இந்தப் பேரிழிவுக்கு பதில் என்ன? சமூக-பொருளாதார-அரசியல் தளங்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பதும், உடனடியாக செயல்படத் துவங்குவதும்தான்!
Ranjini Rasamma -பீ அள்ள முடியாத நாடு அணுசக்தி வல்லமை பற்றி பீற்றிக்கொள்வது கேவலமானது, அநாகரிகமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக