சனி, 12 ஆகஸ்ட், 2017

நடிகை கௌதமி மத்திய தணிக்கை குழு உறுப்பினராக நியமனம்

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார். நடிகை கவுதமி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 புதுடெல்லி: மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக 2015ம் ஆண்டு பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணி செய்து வந்த பஹ்லாஜ் நிஹலானி மீது இந்தித் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கெடுபிடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி இன்று நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.  இதுக்குத்தான் இத்தனை எடுப்பா ....  ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் ...  இத்தியாதி இத்தியாதி ...  கொன்னவங்க கிட்டேயே போயி ... ?  பேசிக்கிறாய்ங்க
நிஹலானியின் 3 ஆண்டு பதவி காலம் வருகின்ற ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறவுள்ளது. மேலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வித்யா பாலன் தணிக்கைத் துறையின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த நடிகை கவுதமியும் மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கவுதமி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. maalaiamalr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக