வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தினகரன் சசிகலா மோடியின் ஹிட்லிஸ்டில்? எடப்பாடி பன்னீர் மோடி அணியில் ...

Special Correspondent FB Wing: கட்சி அலுவலகம் வர பயப்படும் தினகரன் சுருங்கிகிறதா சசிகலா கோஷ்டி.

18 அமைப்புச் செயலாளர்களை நியமித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன் கட்சி அலுவலகம் வருவேன் என்று சொல்லி வராத காரணம் இப்பொது வெளியே வந்து உள்ளது
தினகரன் அறிவிப்புக்கு பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் தினகரன் அறிவித்த பதவியை ஏற்க முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் எனக்கு தெரியாமல், தன்னிச்சையாக, தேர்தல் கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்படாத டிடிவி தினகரன் எனக்கு கட்சியின் மகளிர் அணி இணை செயலாளராக பொறுப்பு அறிவித்துள்ளதாக அறிகிறேன்.

கட்சியும், ஆட்சியும் முதல்வர் எடப்பாடி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்பது கட்சி தொண்டர்களின் கருத்து.எனவே இந்த பதவியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல புரட்சி தலைவி அம்மா பேரவை இணை செயலாளராக ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி சசிகலா ஆணைப்படி என்று சொல்லி இவரையும் தினகரன் நியமித்தார் .
இதுகுறித்து பேசிய எம்எல்ஏ பழனி, டி.டி.வி.தினகரன் அறிவித்த பதவிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். இந்திய பிஜேபி யுடன் கை கோர்த்த கொண்டு அவர்கள் உதவியுடன் ஓபிஎஸ் மற்றும் சசிகலா கோஷ்டி யை எடப்பாடி பழனி சாமி தந்திரமாக கையாளுகிறார் என்று தமிழக பிஜேபி பினர் மகிழ்ச்சியில் உள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக