வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம்.... அவசியம் என்றால்! .. வெல்வோம் என்று எடப்பாடி நம்பிக்கை!

சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
 ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: எடப்பாடி பழனிச்சாமி உறுதி புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், தேவைப்பட்டால் தமிழக அரசு மீது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறியது பற்றி கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார். ஏற்கனவே, அவர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். அணிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும் என்று நம்புவதாக தெரிவித்தார். மேலும், 420 என டிடிவி தினகரன் பேசியது பற்றி கேட்டபோது, “420 என தினகரன் கூறியது அவருக்குத்தான் பொருந்தும். மூன்று மாத நிகழ்வுகளைப் பார்த்தால் அதற்கு தினகரன் தான் பொருத்தமானவராக இருப்பார்” என்றார் முதலமைச்சர். மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக