திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மோடி அடிமைகள் ஆட்சி தமிழகத்தில் ஆரம்பம்

நேற்று வரை எப்படி எப்படியெல்லாம் திட்டிக் கொண்டார்கள். இப்போது எப்படி திடீரென்று இணைந்தார்கள். பேரம் படிந்து இருக்கிறது. நேரம் வந்து விட்டது. சேர்ந்து விட்டார்கள். நினைத்துப் பார்த்தால் கேலிக் கூத்தாகத்தான் தெரியும். இவர்கள் இணைவதால்
மக்களுக்கு என்ன பயன்? அவர்களுக்கு மட்டும் நன்மை இருக்கலாம்.நாலு வருடம் நாற்காலியில் இருப்பது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது மட்டும்தான் அவர்களது குறிக்கோள். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் வந்தாலும் சரி, எத்தனை அணிகள் இணைந்தாலும் சரி மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. கட்சியில் இணைந்தாலும், ஆட்சி நீடிக்க வேண்டுமே. 3-வது
அணியான தினகரன் அணியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்? அவர்களும் பேரத்துக்கு சோரம் போய்விடுவார்களா? என்பதை பார்க்க வேண்டுமே. சசிகலா பண பலத்தால் எதையும் சாதிப்பார். கூவத்தூரில் ரிசார்ட் அரசியல் செய்யவில்லையா? ஜெயிலுக்குள்ளும் தாராளமாக வெளியே சென்று வரவில்லையா? இனியும் கூவத்தூர் பாணியில் ரிசார்ட் அரசியல் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? பா.ஜனதாவால்
தமிழகத்துக்குள் நுழைய எந்த வழியும் இல்லை. அதனால் இந்த பாதையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர்களின் நெருக்கடியால் இணைகிறார்கள். 4 வருடமும் இப்படியே அடிமைபோல் இருப்பார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக