செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சகாயத்துக்கு கொலை மிரட்டல் .. ஆளுங்கட்சி பின்னணியா?

Special Correspondent FB Wing :தொடர் கொலை மிரட்டல்கள் ஆளும்கட்சி பின்னணியா ?  தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில்த னக்கு கொலை மிரட்டல் வருவதாக சகாயம் ஐ.ஏ.எஸ்., சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளார்.
கிரானைட் முறைகேடு குறித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சகாயம் ஐ.ஏ.எஸ்., தலைமையில் விசாரணை நடந்தது. இக்குழு தனது விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இன்று சகாயம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கிரனைட் முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகளை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க மேலும் ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ளார்.

மேலும் கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருகிறது அதனால் தனக்கும் வழக்கு விசாரணைக்கு உதவிய சேவற்கொடியோனுக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் தன்னுடைய விசாரணைக்கு உதவியாக இருந்த பார்த்தசாரதி என்பவர் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கிரானைட் முறைகேட்டை விசாரித்து வரும் சகாயம் குழுவின் பதவி காலத்தை இம்மாதம் இறுதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனுவின் விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக