பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இணைய இருப்பதாகவும், மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க சேர்க்கப்படும் எனவும் தென் மாநில அரசியலை கவனிக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க விரைவில் இணைகிறது - பா.ஜ.க மூத்த தலைவர் சூசக தகவல்
புதுடெல்லி:
மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இணையும் என்றே சில மாதங்களாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தென் மாநில அரசியல் விவகாரங்களை கவனிக்கும் பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் இது குறித்து பி.டி.ஐ செய்தியாளரிடம் பேட்டியளித்துள்ளார்.
பெயர் வெளிப்படுத்த விரும்பாத அந்த தலைவர் கூறியதாவது, “அ.தி.மு.க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது காலத்தைப் பொறுத்தது. ஆனால், அ.தி.மு.க உறுதியாக இணையும். சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். கூட்டணியில் அக்கட்சி இணைந்தால் இயற்கையாகவே மத்திய அரசிலும் இணையும்
தற்போது டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தி வரும் கிளர்ச்சி உட்கட்சிப் பிரச்சனைதான் அது ஆட்சிக்கு ஆபத்தாக இருக்காது.
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்ததை பாஜக வரவேற்கிறது. இருப்பினும், இரு அணிகள் இணைந்ததற்கு பா.ஜ.க பங்களிப்பு ஏதும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது மக்களவையில் 37 உறுப்பினர்களையும், மாநிலங்கள் அவையில் 13 உறுப்பினர்களையும் அ.தி.மு.க கொண்டுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் பா.ஜ.க. நிற்கவைத்த வேட்பாளர்களை அதிமுக ஆதரித்தது. இதனால், மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாலைமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக