புதன், 2 ஆகஸ்ட், 2017

ஜெயலலிதாவால் குடோன்களில் முடக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இலவச டிவிக்கள் தீயில் கருகின

"தீ விபத்து : வெடித்துச் சிதறிய இலவச டிவிகள்!" விழுப்புரத்தில் வேளாண் விற்பனை மைய குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில். அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி பெட்டிகள் வெடித்துச் சிதறியுள்ளது.
விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த குடோனில் திமுக ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த ஆயிரம் இலவச தொலைக்காட்சி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த 2006-2011 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மக்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கிக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்ததால், டிவி வினியோகம் செய்யும் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே மக்களுக்கு வழங்கப்படாத ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி பெட்டிகள் விழுப்புரம் விவசாயிகள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை குடோனில் வைக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வழங்க இருந்த  தொலைக்காட்சி பெட்டிகளை கலைஞர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால்  முடக்கிய  ஜெயலலிதா எவ்வளவு மோசமான ஒரு பிறவி?  மக்களின் பணம் என்ற எண்ணமோ குற்ற  உணர்வோ துளியும்   இன்றி  ஒரு கேவலமான சமூகவிரோதி போன்றுதான்  நடந்துள்ளார் 

இந்நிலையில் இன்று ஆகஸ்ட்-2 ஆம் தேதி அதிகாலை மூன்று மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் அனைத்தும் வெடித்து சிதறியுள்ளது. இதனால், அங்கு பணியில் இருந்த காவலாளி அருண் அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட சத்தம், கரும்புகையால் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து அதிகாரி கணேசன் தலைமையிலான வீரர்கள் 2 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொலைக்காட்சி பெட்டிகள் எரிந்து அதிகளவு கரும்புகை வெளியேறியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜேசிபி மூலம் கட்டடத்தின் சுவரை இடித்து உள்ளே சென்ற வீரர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த விபத்தில் தீயில் எரிந்த தொலைக்காட்சி பெட்டிகளின் சேத மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று இன்று ஆகஸ்ட்-2 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள 9 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக