வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

பொன்.ராதாகிருஷ்ணன் :நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம்

நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில், திமுக பகல் வேஷம் போடுகிறது, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கிடைத்த வரப் பிரசாதம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு கிடைக்காது, அவ்வாறு கிடைத்தால் தமிழக மாணவர்களின் அழிவுக்கு அது வழிவகுக்கும். நீட் தேர்வு அவசர சட்டம் மூலம் மாணவர்களை குழுப்புவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக