வியாழன், 31 ஆகஸ்ட், 2017

பெனாசிர் கொலையில் முஸ்ராப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட், அவரது சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ, கடந்த 2007 டிச.27ம் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. அதிபராக இருந்த முஷாரப்பிற்கு, இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். வழக்கை விசாரித்த கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததுடன், அவரது சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 2 பேருக்கு 17 வருட சிறை தண்டனையும், மேலும் 5 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக