சனி, 19 ஆகஸ்ட், 2017

அதிமுக அணிகள் இணைப்பு முயற்சி தோல்வி ... பன்னீர்செல்வம் புதிய பதவி கோரிக்கை!

அதிமுகவின் இரு அணிகளும் இணைய விருப்பதாக தகவல்கள் பரவின. ஜெ.நினைவிடத்தில் அணிகள் இணைப்பை நடத்தி முடித்ததும் கட்சி தலைமை செல்வது என்று முடிவெடுத்திருந்தானர். இதற்கிடையில் இரு தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் புறப்பட்டுவிட்டனர். ஓபிஎஸ் அணியின் ஆலோசனையும் நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் இன்னமும் இரு அணிகளும் ஏன் இணையாமல் இருக்கின்றன. ஆட்சியிலும், கட்சியிலும் பதவி, பொறுப்பை பிரித்துக்கொடுப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம்தான் அணிகள் இணைப்பின் தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் இரு அணிகளும் இணையும் என்ற எதிர்ப்பார்ப்பில் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் கூடிய எம்.எல்.ஏக்கள் கலைந்து செல்கின்றனர்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக