ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஓவியா தற்கொலை .. டி ஆர் பி எகிறிடுச்சா? கவண் படம் இன்னும் பார்க்கலையா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஓவியா காதல் தோல்வியால் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்துகொண்டுள்ளதால் அந்த நிகழ்ச்சியின் புகழ் அசுர வளர்ச்சியில் உள்ளது. நிகழ்ச்சிக்கு உள்ள புகழை விட ஓவியாவுக்கு தற்போது உள்ள புகழ் அதிகமே. அந்த அளவுக்கு ஓவியா மீது அன்பு மழை பொழிந்து, ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் நடிகை ஓவியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் கடந்த சில தினங்களாக பலரையும் எரிச்சலடைய வைத்துள்ளது. ஓவியாவின் காதலை ஏற்காத ஆரவ் அவரை புறக்கணித்து வருகிறார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ள ஓவியா அரக்கத்தனமாக நடந்து வருகிறார்.

 இது ஓவியா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகை ஓவியா காதல் தோல்வியால் பிக் பாஸ் வீட்டில் நேற்று மாலை தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடி வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் காவல்துறை உயர் அதிகாரிகள் நுழைந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து ஓவியா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டதாக தெரிகிறது.வேப்துனயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக