வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

முரசொலி - பவள விழா ....உதயநிதி : ஒரு சின்ன விளக்கம்

Sivasankaran.Saravanan: கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலிக்கு இன்னொரு பிள்ளையின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு உதயநிதி நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றதில் எனக்கு உவப்பு ஏதுமில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
முக்கியமான செய்தி : முரசொலி பத்திரிகை கலைஞரின் தனிப்பட்ட சொத்து. திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி தான் திமுக என்று சொல்லுமளவிற்கு கலைஞர் வேறு திமுக வேறு இல்லை என்கிற அளவுக்கு கலைஞர் தான் திமுக என்று இருப்பதால் அது திமுகவின் பத்திரிகையாக அறியப்படுகிறதே தவிர சட்டப்படி கலைஞரின் உழைப்பால் உருவான அவரது தனிப்பட்ட சொத்து .
கலைஞர் தனது வீட்டை மருத்துவமனையாக மாற்ற எழுதித்தந்தார். அண்ணா அறிவாலயத்தையும் அவர் தான் கட்டினார். ஆனால் அண்ணா அறிவாலயம் அவரது சொத்தல்ல . அது திமுகவின் சொத்து. அதை அவரால் தனிப்பட்ட முறையில் ஏதும் செய்யவியலாது.

முரசொலி பத்திரிகை கலைஞருக்கு பிறகு நிர்வாக அறங்காவலராக ஸ்டாலினிடம் சென்றுள்ளது. இன்று இந்து ராம் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியது நினைவிருக்கலாம். ஒரு பத்திரிகை ஒருவரது ாலத்திற்கு பிறகும் தொடர்ந்து இயங்கவேண்டுமென்றால் அது Trust ஆக மாறவேண்டியது அவசியம். ஸ்டாலின் தனது அப்பா ஆரம்பித்த பத்திரிகை தனக்குப்பிறகும் தன் பையன் உதயநிதி பொறுப்பில் தொடர்ந்து வெளிவரவேண்டும் என நினைத்திருக்கலாம். ஏன் உதயநிதியை விட்டால் வேறு யாரும் இல்லையா என்றால் அது அவரது சொந்த உரிமை. அதிலே எதிர்க்கிற உரிமை தார்மீகப்படி நமக்கு இல்லை .மற்றபடி திமுக என்ற கட்சியில் உதயநிதி முன்னிறுத்தப்பட்டால் அதை விமர்சிக்க எல்லா உரிமையும் நமக்கு இருக்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக