புதன், 9 ஆகஸ்ட், 2017

கடக்க இயலாத நதிகள் நாங்கள்.. மலையக மக்களின் உழைப்பால்தான் இலங்கை ....

மலையகத்தை சீண்டும் யாழ்ப்பாண புலம்பெயர் வெள்ளாளசாதி தமிழன் ஒருவன்
Esther Nathanie: அண்மையில் ஒரு ஈழத்தமிழர் ஒருவர் மலையக மக்களை வெகு கேவலமாக திட்டி பேசியிருந்தார். அதை பார்த்து நான் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானேன் என்னையும் மீறி அழுதுவிட்டேன் .
மலையக பெண்களையும் மலையக  வாழ்க்கையையும் அவர் மிக கேவலமாக  பேசி ஒரு youtube இல் வெளியிட்டார்,
இன்று இந்தியாவில் பார்த்தீர்கள் என்றால் ஒரு காதலர்களை நிர்வாணமாக அழைத்து சென்றார்கள் காரணம் அவர்களின் சாதி வெறி , அதே வெறியை இந்த ஈழத்தமிழர் காட்டியுள்ளார்.  அவர் வெள்ளாளராம் விவசாயியாம் நாங்க பறையன் பறச்சியாம் , இது  சாதி வெறியின் உச்சமே .
மலையக மக்களின் துன்பமே அவர்களுக்கான அடிப்படைவசதி இல்லாமைதான்.
இன்றுவரை அவர்களின் துன்பம் குறையவேயில்லை.
நாங்கள் என்றுமே நீ யாழ்ப்பாணம் நீ மட்டக்களப்பான் என்று பிரித்ததேயில்லை,  சிங்களவர்கள்தான் இனவாதத்தால் கொல்கிறார்கள் என்றால் நீங்க எங்களை தீண்டத்தகாதவர்களாவே பார்க்கிறீர்கள்.
மலையக மக்களின உழைப்பால்தான் இந்த இலங்கை தள்ளாடாமல் நிற்கிறது.   இன்று இப்படி சாதிவெறி பிடித்தவன் என்றால் முன்னர் எங்களை எவ்வாறு நசுக்கி இருப்பீர்கள்?

இந்தளவுக்கு எங்களை கேவலமாக புறக்கணிக்க நாங்கள் செய்த துரோகம்தான் என்ன தமிழா?  தமிழர் என்பதாலா?? கருத்தியல் ரீதியில் தோட்டக்காட்டான் வடக்கத்தீயான் என்ற வார்த்தை இன்றும் நடைமுறையில் இருக்க இப்படிப்பட்டவர்களேக் காரணம்.
 1983 ம் ஆண்டு கறுப்பு ஜீலையில் கழுத்தில் டயர் மாலை போட்டு எரிக்கப்பட்ட எந்தவொரு மலையக தமிழனுக்கு தெரியாது அது  யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பிரச்சினை என்பது.
மலையாக மக்கள்  வயிற்றுக்காக வேலை தேடி வந்தவர்கள்.. அப்படி வந்தவர்களை எரித்தார்கள்.
இவன் மலையகம் ஈழத்தவன் என்று அப்பொழுது அந்த சிங்களவர்கள்  பார்க்கவில்லை .  தமிழன் என்பதற்காகத்தானே கொன்றார்கள்!!
'உள்ளவன் இல்லாவிட்டால் ஒருமுழம் கட்டை 'என்பார்கள் மலையகத்தில் ஆக சரியான தலைமைத்துவமும் வளர்ச்சி இருந்தால் இப்படி யான அமிலம் அருந்தும் மனிதர் கூட்டம் எம்மை கை நீட்டாது!!
ஈழத்தமிழர்கள் எல்லோரூம் இவன் போலல்ல யுத்தம் பலரை திருத்தி உணர்வுள்ளவர்களாக்கீயுள்ளது .  இவனைப் போல நாமும் அப்படி அல்ல நாங்கள் எப்போதும் உங்களை தமிழ் பேசும் மக்கள் என்றே கருதுகிறோம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக