வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

லண்டன் ஒருபாலின இந்து திருமணம்

Kalavati Mistry and Miriam Jefferson met more than 20 years ago on a ... in what is believed to be the UK's first interfaith lesbian wedding.
லண்டன்: பிரிட்டனில், ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்கள், ஹிந்து முறைப்படி திருமணம் செய்தனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் வசித்து வரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், கலாவதி, 48. அமெரிக்காவின் டெக்சாசைச் சேர்ந்த பெண், மெ
ரிம் ஜெபர்சன். இவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களாக, 20 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.
இருவரும், பிரிட்டனின், லிசெஸ்டர் நகரில், சமீபத்தில், ஹிந்து முறைப்படி திருமணம் செய்தனர்.மந்திரம் முழங்க, தாலி அணிவித்து, மாலை மாற்றி, இருவரும் திருமணம் செய்தனர். இதில், அவர்களது நண்பர்கள் பங்கேற்றனர்.


இது குறித்து கலாவதி கூறியதாவது: இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பது மிக கடினம். வீட்டிலும், சமூகத்திலும் கடும் எதிர்ப்பு ஏற்படும்; அது போன்ற எதிர்ப்பு எனக்கும் ஏற்பட்டது; ஆனால், தைரியமாக, நான் ஓரினச் சேர்க்கையாளர் என
அறிவித்து, சட்டப்படி திருமணம் செய்துஉள்ளேன். என் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பின்பற்ற விரும்பினேன்; அதனால், ஹிந்து முறைப்படி திருமணம் செய்தேன்.இவ்வாறு அவர்
கூறினார்.பிரிட்டனில், ஹிந்து முறைப்படி நடந்த, முதல், ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் இது; இவர்கள் இருவரும், முன்னதாக, யூத முறைப்படியும் திருமணம் செய்தனர். மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக