செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அர்விந்த் கேஜ்ரிவால் அரசு அவசர சட்டம் .. டெல்லியில் மனிதர்கள் மூலம் சாக்கடை சுத்தம் செய்பவர் மீது கொலை வழக்கு

Shalinmarialawrence?:"கடந்த ஞாயிற்று கிழமை டெல்லியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் மருத்துவமனையின் சாக்கடை டேங்க்கை சுத்தம் செய்யும்பொழுது விஷவாயு தாக்கி இறந்தார் ,மற்றும் மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர் ."
இது போன்ற செய்திகள் தமிழ்நாட்டிற்கு புதிது இல்லைதான் . இந்தியாவிற்கும் புதிது இல்லைதான் .ஆனால் இதற்கு பின்பு நடந்த விஷயம்தான் புதிது .
இந்த சம்பவத்திற்கு பின் டெல்லியின் துணைநிலை ஆளுநர் அவர்கள் டெல்லியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார் அதன் பின்னே அவசர சட்டம் ஒன்றை டெல்லி அரசு கொண்டுவந்தது .அது ஒரே இரவில் சாக்கடை டேங்குகளை மனிதர்களை வைத்து சுத்தம் செய்வதற்கான தடை உத்தரவு .
இனிமேல் டெல்லியில் யாரும் மனிதர்களை வைத்து சாக்கடை டேங்குகளை சுத்தம் செய்ய வைப்பது சட்டப்படி குற்றம் ..அப்படி யாரவது செய்வார்களெனின் அவர்கள் மீது கொலை வழக்கு (culpable homicide ) உடனடியாக பதிவு செய்ய படும் .
இன்னும் 15 நாட்களில் சாக்கடை டேங்க்குகள் சுத்தம் செய்யும் உலகளாவிய மிக நவீன இயந்திரங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அவைகள் உபயோகப்படுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது .அதுவரை சாக்கடை அடைப்பினால் பாதிக்கப்படுவோர் நீர் வாரியத்தை மட்டுமே அணுக வேண்டும் என்று அவசரஉதவி தொலைபேசி எண்களுடன் டெல்லி முழுவது பாதாகைகள் ஒட்டப்பட்டிருக்கின்றன .

டெல்லியில் மனித உயிர்களை காப்பாற்ற இந்த சட்டம் இயற்றப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் சாக்கடை சுத்த பணியில் அதிகமான உயிர்களை காவு வாங்கியதற்கு பெயர் போன தமிழ்நாட்டில் ஒரு பாழாய் போன கட்சியும் அந்த கட்சியை சார்ந்த அரசியல் வியாபாரிகளும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் ஏழு தலைமுறைகளுக்கு சொத்தை சேர்க்கும் பணியில் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு அரசியல் பேரம் நிகழ்த்தி கொண்டிருந்தார்கள் என்பது sirappu செய்தி .
இந்த வெட்கம்கெட்ட ,மானம்கெட்ட சுயநல மிருகங்களை இந்த மாநிலத்தின் முதல்வர் ,துணை முதல்வர் என்று இன்று முதல் அழைப்போமாக .
Admk - அண்ணா துரோகிகள் முன்னேற்ற கழகம் .
#abolishmanualscavenging
#wakeupTNGovernment
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக