செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

கருணாஸ், தனியரசு, அன்சாரி கூட்டறிக்கை ..

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் முடிவெடுப்போம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், ஓ.பி.எஸ் அணியும் ஒன்றாக இனைந்து விட்டதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர். அதில், எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், அவருக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது ஆளும் எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகிய மூன்று எம்.எல்.ஏக்களும் என்ன நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அவர்கள் மூவரும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் “ தமிழக அரசியலின் தற்போதைய சூழலுக்கேற்ப உரிய நேரத்தில் முடிவெடுப்போம்.. தமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசின் வரம்பு மீறிய தலையீடே குழப்பத்திற்கு காரணம்” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தனியரசு எம்.எல்.ஏ மட்டும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக