ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இசட் பிரிவு பாதுக்காப்பு வேண்டி பன்னீர்செல்வம் நாடகம்.. கத்தியோடு வந்த அதிமுக சோலைராஜன்!

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியுடன் தாக்க முயன்றதாக கூறி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்திலும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடேயும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். ஆதரவாளரின் ஒருவரின் இடுப்பில் இருந்து கத்தி கீழே விழுந்துள்ளது. அதை அவர் குனிந்து எடுக்கும்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாவலர் அதனை பார்த்ததும், அவரை தனியே அழைத்து கத்தியை பிடிங்கி விசாரணை நடத்தினார். அப்போது உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி என செய்திகள் பரவத் தொடங்கின.  அதிமுக தொண்டர்கள் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று முன்பு எம்ஜியார் அறிவித்ததை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கும் இவர்  உண்மையான ரத்தத்தின் ரத்தம்தான்?

கத்தி வைத்திருந்தவர் யார் என விசாரித்தபோது திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சோலைராஜன். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கத்தியை தான் எப்போதும் இடுப்பில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விமான நிலைய காவல்நிலையத்தில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். மேலும் அந்த காவல் நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, பரஞ்சோதி ஆகியோர் மனு அளித்துள்ளனர். ஜெ.டி.ஆர்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக