சனி, 19 ஆகஸ்ட், 2017

ராமதாஸைச் சந்திக்கிறார் திருநாவுக்கரசர்!

தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், தன் மகள் திருமண விழா அழைப்பிதழைப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சியினருக்குக் கொடுப்பதற்கு இன்று ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுச்சேரி வருகிறார். அத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸைச் சந்தித்து திருமண விழா அழைப்பு கொடுக்க அப்பாய்ட்மென்ட் பெற்றுள்ளார்.
ஏற்கெனவே பாமக தலைமை, பாஜகவைத் தள்ளிவைத்து வரும் நிலையில் திருநாவுக்கரசு, ராமதாஸ் சந்திப்பு கூட்டணிக்கான அச்சாரம் என்கிறார்கள் பாமக-வினர்.
பாஜக அரசு கொண்டுவரும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக பாமக வலிமையான போராட்டங்களை நடத்தி வருகிறது. சமீபகாலமாக பெட்ரோலிய கெமிக்கல் தொழிற்சாலைக்கு எதிராகப் பலவிதமான போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் திருநாவுக்கரசர் குடும்ப நிகழ்ச்சி, தேர்தல் கூட்டணி களமாக அமையும் என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள். minnambalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக