வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

இந்து பத்திரிகை .. திராவிட இயக்க மலர் வெளியிடப் போகிறதாம் .. நடுநிலை வேஷம்....

Marx Anthonisamy: நடுப்பக்க நாராயணருடன் ஒரு உரையாடல்.. நான்கு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு.
"சமஸ் பேசுறேன் சார்"
எதிர்பார்க்கவில்லை. யார் தமிழ் இந்து சமசா எனக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். எப்படி இருக்கீங்க ஹெர்னியா ஆபரேஷன் எல்லாம் முடிந்து குணமாயிட்டீங்களா என விசாரித்தேன். என்ன இருந்தாலும் நான் பணி செய்த கல்லூரியில் படித்த மாணவர் அல்லவா. பாசம்..
விஷயத்திற்கு வந்தார். கலைஞர் பொன் விழா வை ஒட்டி திராவிட இயக்கச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடுகிறார்களாம். இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதலை உருவாக்குவது நோக்கமாம். கட்டுரை ஒன்று கேட்டார்.
நன்றி சொல்லிவிட்டு நான் சொன்னது:
" மன்னிக்க வேண்டும். நான் உங்கள் இதழின் மறைமுக அஜென்டா பற்றியும் அதில் நிரப்பப் பட்டுள்ள இந்துத்துவ ஆதரவு சக்திகள் குறித்தும், நீங்கள் உட்பட, தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். என்னைப் பொருத்த மட்டில் தினமலர் அல்லது விஜயபாரதம் ஆகியவற்றை விட உங்கள் பத்திரிகை ஆபத்தானது என்பது என் கருத்து. அவை வெளிப்படையாக இந்துத்துவத்தை ஆதரிப்பவை.

ஆனால் நீங்கள்.. நடுநிலை போலக் காட்டிக் கொண்டு நச்சை பிதுக்கிப் பிதுக்கி க் கட்டுரைகளில் தடவி வைப்பதும் , வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ் சக்திகளுக்கு முக்கியம் அளித்து மேடை ஏற்றி அழகு பார்ப்பதும். உங்களின் தகுதியை மறந்து உலகத்துக்கே அட்வைஸ் வழங்குவதும்... இன்னும் ஆபத்தானவர்கள் நீங்கள்.
நான் உங்களை விமர்சித்து எழுதி வருவதால் உங்கள் பத்திரிகை சர்குலேஷன் குறையும் என எதிர்பார்த்துச் செய்யவில்லை. அதெல்லாம் என்னளவில் சாத்தியமில்லை என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் சொல்வது நியாயமாகத்தான் இருக்கும் என நம்பக் கூடியவர்களும் இங்கு உண்டு. அவர்கள் மத்தியில் உங்களை அடையாளம் காட்டி எச்சரிக்கை செய்வதுதான் என் நோக்கம். அதில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதே என் கணிப்பு.
நான் உங்கள் பத்திரிக்கையில் எழுத முடியாது சாரி. உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்..."
என்கிற ரீதியில் முடித்துக் கொண்டேன்.
ஆக 'தி இந்து'த்துவா திராவிட இயக்க மலர் வெளியிடப் போகிறது. பத்ரி சேஷாத்ரி, பி.ஏ.கிருஷ்ணன், அரவிந்தன் நீலகண்டன், காலச்சுவடு கண்ணன், ஜெயமோகன் முதலான திராவிட இயக்கப் பேரறிஞர்கள் கட்டுரைகளுக்கு மத்தியில் க.திருநாவுக்கரசு போன்ற அறிஞர்களின் ஓரிரண்டு கட்டுரைகளையும் பொதித்து ஒரு 'இந்து' த்துவா திராவிட இயக்க மலர் விரைவில் ரெடி.
திராவிட இயக்கத்தவர்களே தயாராக இருங்கள். நிறைய உங்களுக்கு அட்வைஸ் கள் வழங்கும் 'அட்வைஸ் அண்ணாச்சி' சமஸ் கட்டுரையும் அதில் உண்டு.... படித்துத் திருந்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக