தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு, கடந்த சில மாதங்களாக
உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி
சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே கருணாநிதிக்கு தொடர்
சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற வைர
விழா மற்றும் பிறந்தநாள் விழாவில்கூட கருணாநிதி
பங்கேற்கவில்லை. குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த முரசொலி
பவளவிழாவிலும் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு
கூட கருணாநிதி, காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மணி நேர
சிகிச்சைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக