செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

தமிழக வியாபம் ? மருத்துவ சேர்க்கையில் இரட்டை சான்றிதழ் .. சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இரட்டை இருப்பிடம் சான்றிதழ் மூலம் பலர் மருத்துவ சேர்க்கை தகுதி பட்டியலில் இடம் பெற்றது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏதோ ஒன்று இரண்டு பேர் இப்படி கொடுத்துவிட்டார்கள் என்று காவல் ஆணையரிடம் புகார் அளிப்பதால் இந்த முறைகேட்டின் மொத்த உருவமும் வெளிச்சத்திற்கு வராது என்று அறிக்கை ஒன்றில் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார். வியாபம் ஊழல் போல இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இரட்டை சான்றிதழ் வழங்கியவர்கள் அதன் அடிப்படையில் தகுதி பட்டியலை வெளியிட்டவர்கள், தேர்வு கமிட்டிக்கு நிர்பந்தம் கொடுத்தவர்கள் என அனைவரின் மீதும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்டாலின் நிலைப்பாடாகும். இரட்டை இருப்பிட சான்றிதழ் இருமாநிலம் விவகாரம் என்பதாலும், அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் தனியாரிடம் உள்ள அரசு இடஒதுக்கீட்டில் சேர கடந்த 22-ம் தேதி வெளியான தகுதி பட்டியல் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஆளுநரை ஸஙடாலின் வலியுறுத்தியுள்ளார். தினகணர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக