புதன், 2 ஆகஸ்ட், 2017

ஆக்கிரமிப்பு? நீட்,ரேஷன்,உணவு பாதுகாப்பு (உணவு பறிப்பு) சட்டங்கள் !

krishnavel.T.S : 2016 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்த பின்னால்
மத்திய அரசு மூன்று திட்டங்களை ஒப்புக்கொள்ளும்படி ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசை வற்புறுத்தியது.
1. NEET for Medical Entrance
2. National Food Security Act (NFSA), 2013
3. Uday Electricity Scheme
NEET for Medical Entrance
இந்த திட்டத்தை பற்றி பெரிதாக சொல்ல வேண்டியதில்லை, நம் நாட்டில்
1. கர்நாடகா 50 மருத்துவ கல்லூரிகள்
2. மகாராஷ்டிரா 48 மருத்துவ கல்லூரிகள்
3. தமிழ் நாடு 45 மருத்துவ கல்லூரிகள்
4. ஒரு சில 5 மாநிலங்களில் 20-30 மருத்துவ கல்லூர்கள் உள்ளன,
பிற எல்லா மாநிலங்களிலும் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்,
நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டுவாரேன், ரெண்டையும் கலந்து நாம ரெண்டு பெரும் ஊதி ஊதி திங்கலாம்.
ஜெயலலிதா இந்த NEET ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்
National Food Security Act (NFSA), 2013
இந்த திட்டத்தின் படி இதில் பங்கேற்கும் எல்லா மாநிலங்களிலும், நபர் 1-க்கு மாதம் தோறும் 5 கிலோ அரிசி / கோதுமை / ராகி, சோளம் போன்ற உணவு தானியங்கள் முறையே ரூ.3 / 2 / 1 என்ற விலைகளில் கொடுக்கப்படும்
இதற்கு தமிழக அரசின் பதில் நாங்கள் ஏற்கனவே நபர் 1-க்கு மாதம் தோறும் 8 கிலோ அரிசி அல்லது ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி இலவசமாகவே கொடுக்கிறோம்,
எனவே இந்த திட்டத்தில் தமிழகம் சேர்ந்தால். தற்போது இலவசமாக கொடுக்கும் அரிசியை கிலோ ரூ.3 என்ற விலைக்கு விற்கவேண்டும் அதனால் இந்த திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி
ஜெயலலிதா இந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மறுத்துவிட்டார்

Uday Electricity Scheme
இந்த திட்டத்தின் படி இதில் பங்கேற்கும் எல்லா மாநிலங்களும், தங்கள் மாநிலத்தில் உள்ள DISCOM (Power Distribution Company) மின்சார விநியோக நிறுவனங்களின்,
1. மொத்த கடன்களில் 75% கடன் தொகையை அரசாங்கத்தின் கடனாக எடுத்து கொள்ளவேண்டும்,
2. அந்த கடன் தொகையை அரசு பிணை பத்திரங்கள் மூலமாக (கிசான் விகாஸ் பத்திரம் போல) வெளியிட்டு அதன் மூலம் பணம் திரட்ட வேண்டும்
3. இந்த பத்திரங்களின் முதிர்வு காலம் 10 – 15 ஆண்டுகளாக இருக்க வேண்டும்
4. மீதம் உள்ள 25% கடன்களை, வங்கிகளுக்கு திருப்பி செலுத்த, மின்சார விநியோக நிறுவனங்கள், தங்களது கட்டண முறையை மாற்றவேண்டும்
5. மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் ஒரே சீரான புதிய மின்கட்டண முறையை கடைபிடிக்க வேண்டும்
இதையெல்லாம் மாநில அரசு செய்ததால், பதிலுக்கு மத்திய அரசு,
1. உள்நாட்டு நிலக்கரி சப்பிளையை அதிகரிக்கும் (அது எப்படி நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க முடியும்)
2. எல்லா மாநிலங்களிலும் நிலக்கரி ஒரே விலைக்கு விற்க ஏற்பாடு செய்யும் (உதய் திட்டம் இல்லாமலே செய்ய வேண்டியது தானே)
3. முதல் வகை நிலக்கரி சுலபமாக கிடைக்க வழி செய்யும் (உதய் திட்டம் இல்லாமலே செய்ய வேண்டியது தானே)
4. இரண்டாம் வகை நிலக்கரி சுலபமாக கிடைக்க வழி செய்யும் (அது என்ன இரண்டாம் வகை நிலக்கரி )
5. குறிப்பிட்ட விலையில் அதிக நிலக்கரி கிடைக்க வழிவகை செய்யும் (உதய் திட்டம் இல்லாமலே செய்ய வேண்டியது தானே)
6. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல வழிவகை செய்யும் (அது தான் ஏற்கனவே இருக்கே)
7. மின்சாரம் விலைக்கு வாங்குவதை, டெண்டர் மூலம் ஏற்பாடு செய்யும்(அது தான் ஏற்கனவே இருக்கே)
இதற்கும் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசு,
1. தமிழக மின்சார வாரியத்தின் மொத்த கடனே ரூ.4500 கோடி மட்டும் தான்
2. அந்த கடனை இன்னும் இரண்டு ஆண்டுகளில், நேர் செய்துவிட எல்லா வேலைகளும் நடந்துகொண்டிருக்கிறது
3. தமிழக மின்சார வாரியம், மற்ற வடமாநில மின்சார வாரியங்களை போல (குறிப்பாக ராஜஸ்தான்(No.1 loss making EB in India), குஜராத் மின்சார வாரியங்களை போல) வங்கிகள் கூட கடன் தர மறுக்கும் அளவுக்கு கடனில் தள்ளாடவில்லை,
4. தமிழக மின்சார வாரியத்தின் கடனை அரசாங்கத்தின் கணக்கில் சேர்ப்பது தேவையில்லாத வேலை
5. இந்தியாவில் தமிழக மின்சார வாரியத்தின் மின்கட்டணமே இருப்பதில் மிக குறைவானது
6. தமிழக மின்சார வாரியத்தின் அதிபட்ச மின்கட்டணமே ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60(commercial) மற்ற பல மாநிலங்களில் அதிபட்ச மின்கட்டணம் ரூ.9.50(commercial)
7. நிலக்கரி வாங்குவதில் எந்த புதிய பலனும் தனிழ் நாட்டுக்கு இல்லை
அதனால் இந்த திட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று கூறி
ஜெயலலிதா இந்த மூன்றாவது ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மறுத்துவிட்டார்

இப்போது 2016 தமிழக போது தேர்தலுக்கு பின் தமிழ் நாட்டில் நடந்த நிகழ்வுகளை வரிசையாக பார்ப்போம்.
1. மே மாதம் தேர்தல் நடைபெறுகிறது
2. மே மாதம் ஜெயலலிதாவின் தலைமையில் ஆட்சி தொடங்குகிறது
3. மூன்று மாதங்கள் ஜெயலலிதாவின் தலைமையில் ஆட்சி நடக்கிறது
4. மூன்று மாதங்களாக ஜெயலலிதாவை இந்த மூன்று ஒப்பந்தங்களில் கையொப்பமிட மத்திய அரசு நெருக்கடி கொடுக்கின்றது
5. ஜெயலலிதா மறுக்கிறார்
6. செப்டம்பர் 23-ஆம் தேதி ஜெயலலிதா உடல்நல குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்
7. 21 அக்டோபர் 2016-ல் Uday Electricity Scheme-ல் தமிழ அரசும் சேர்ந்து கொள்வதாக தமிழக அரசின் மின்சாரதுரை அமைச்சர் பி.தங்கமணி கையோப்பமிடுகிறார்
8. 1 நவம்பர் 2016-ல், National Food Security Act (NFSA)-ல் தமிழக அரசம் சேர்ந்துவிட்டதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் பி. ராம மோகன ராவ் அரசு ஆணை வெளியிடுகிறார்.
9. 8 நவம்பர் 2016-ல், இந்தியா முழுவதும் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது
10. 15 நவம்பர் 2016-ல், NEET for Medical Entrance-ல் தமிழ அரசும் சேர்ந்து கொள்வதாக தமிழக அரசின் கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கையோப்பமிடுகிறார்
11. 6 டிசம்பர் 2016-ல் ஜெயலலிதா மரணம் அறிவிக்கபடுகிறது.
அவ்வளவு தான் படம் முடிஞ்சிபோச்சி
இதற்கு மேலே 2017
• ஜனவரியில் ஜல்லிக்கட்டு போராட்டம்,
• பிப்ரவரியில் உச்ச நீதி மன்றத்தின் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு
• அதிமுக தலைமை யார் என்று போராட்டம்
அதனால மக்களுக்கு எல்லாம் மறந்து போச்சு
இப்போ தமிழக அரசு, மேலே சொன்ன மூணு பிரச்சனைகளுக்கு மத்திய அரசை எதிர்த்து போராடுது
இவையெல்லாம் தாண்டி தற்போது GST etc.,
இந்த பதிவில் யாருக்காவது ஏதாவது புரிந்தால் எனக்கு மகிழ்ச்சி
.
.
.
.
.
.
.
பின்குறிப்பு-1
நான் ஜெயலலிதாவின் ஆதரவாளர் அல்ல என்பது என் பதிவுகளில் எனக்கே தெரியாத என் முன்னோர்களை திட்டும் நண்பர்களுக்கும் தெரியும்
.
.
.
.
.
.
.
பின்குறிப்பு-2
ஜெயலலிதாவையும் பாராட்டி ஒரு பதிவு போட வைத்த மத்திய ஆப்கி பார் சர்காருக்கும் நன்றி
.
.
.
.
.
.
.
பின்குறிப்பு-3
ஓரிரு வாரங்களில்
நான் எதோ ஒரு அரசு சிறைச்சாலையில்,
1. மின்கம்பியை நானே கடித்தோ,
2. உணவு உண்ணும் தட்டை இரண்டாக வெட்டி அதை கொண்டு என் கழுத்தை நானே அறுத்து கொண்டோ
3. என் இடுப்பில் இருந்ததாக சொல்லப்படும் அறைனங்கயிற்றால் (நான் போடுவதில்லை) தூக்கில் தொங்கி
நான் செத்து விட்டதாக செய்தி வந்தால் அதையெல்லாம் நம்பாதீர்கள்
ஜெயஹிந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக