சனி, 5 ஆகஸ்ட், 2017

முட்டை... ஐரோப்பாவின் மிக‌ப்பெரிய‌ கிருமிநாசினி ஊழ‌ல்..

kalaimarx :முட்டையில் முத‌லாளித்துவ‌ம். ஐரோப்பாவின் மிக‌ப்பெரிய‌ கிருமிநாசினி ஊழ‌ல் கார‌ண‌மாக‌ முட்டை விற்ப‌னை வீழ்ச்சி. ஜேர்மனி, பிரான்ஸ், நெத‌ர்லாந்து ஆகிய‌‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளில் க‌டைக‌ளில் இருந்து முட்டைக‌ள் அக‌ற்ற‌ப் ப‌டுகின்ற‌ன‌.
நெத‌ர்லாந்து கோழிப்ப‌ண்ணைக‌ளில் தான் இந்த‌ ஊழ‌ல் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌து. ப‌ண்ணைக‌ளில் வ‌ள‌ர்க்கும்‌ கோழிக‌ளுக்கு ஏற்ப‌டும் கிருமித் தொற்றை அக‌ற்றுவ‌த‌ற்கு கிருமி நாசினி தெளிப்ப‌து வ‌ழ‌க்க‌ம்.
கோழிப் பேன் என்ற‌ழைக்க‌ப் ப‌டும் கிருமி அக‌ற்றுவ‌த‌ற்கு, Chickfriend என்ற‌ நிறுவ‌ன‌ம் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ இர‌சாய‌ண‌ப் பொருள் தான் ஊழ‌லுக்கு கார‌ண‌ம்.
கிருமிநாசினியில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ Fipronil என்ற‌ இர‌சாய‌ண‌ ப‌தார்த்த‌ம் ஒரு ந‌ஞ்சு. அதிலுள்ள Dega-16 எனும் ந‌ஞ்சு த‌டைசெய்ய‌ப் ப‌ட‌வில்லை. ஆனால் கிருமிநாசினியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ த‌டை உள்ள‌து.

Chickfriend நிறுவ‌ன‌ம், பெல்ஜிய‌த்தில் இருந்து Fipronil வாங்கியுள்ள‌து. அந்த‌ பெல்ஜிய‌ நிறுவ‌ன‌ம் ருமேனியாவில் இருந்து வாங்கியிருந்த‌து. இருப்பினும் Fipronil தீமை ப‌ய‌க்கும் ந‌ஞ்சு என்று தெரிந்து கொண்டே கிருமிநாசினியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து.
Chickfriend நிறுவ‌ன‌ம் ஒரு க‌ற்ப‌னையான‌ பெய‌ரை உருவாக்கி ப‌ற்றுச்சீட்டில் Fipronil பெய‌ரை ம‌றைத்துள்ள‌து. இந்த‌ ஊழ‌ல் க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர் தான், Chickfriend செய்த‌ மோச‌டிக‌ள் அடுத்த‌டுத்து வெளியாகின‌.
அந்த‌ நிறுவ‌ன‌த்தின் ஆவ‌ண‌ங்க‌ள் போலியான‌வை. கிருமிநாசினி தெளிப்ப‌த‌ற்கு த‌குதியான‌ சான்றித‌ழ் பெற‌வில்லை. இதையெல்லாம் யாரும் ப‌ரிசோதிக்க‌வில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக