புதன், 23 ஆகஸ்ட், 2017

புதிய முதல்வர் யார்?: தினகரன் அணி ஆலோசனை

முதல்வர் பழனிசாமியை மாற்றி விட்டு புதிய முதல்வராக சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம் என, தினகரன் அணியினர், சென்னையில் நேற்று ஆலோசனை நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
: தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் நேற்று ராஜ்பவன் சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, கடிதம் வழங்கினர். அதில் முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். கவர்னரை சந்தித்த பின் சென்னை, அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு சென்றனர். பரிசீலனை: அங்கு தினகரன் தலைமையில் புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடந்தது. அதில் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் மற்றும் செம்மலை ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த தகவல் தெரிய வந்ததும் 'தினகரன் அணிக்கு செல்ல மாட்டேன்' என செம்மலை அறிவித்தார். 
அதன்பின் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சபாநாயகர் தனபாலுக்கு முதல்வர் பதவி வழங்கலாம் என சசிகலா தம்பி திவாகரன் யோசனை தெரிவித்தார். சசிகலாவிடம் ஆலோசித்த பின் புதிய முதல்வர் பெயரை அறிவிக்க தினகரன் அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் தினமலர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக