செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

420 களின் ஆட்சியில் மேலும் மேலும் சீரழிவுகள் .. உபியில் மட்டுமல்ல ..

muruganantham.ramasamy.: கோரக்பூர் குழந்தைகள் மரணம் எனக்கு ஆழ்ந்த துயரைத்தந்ததே தவிர வியப்பைத்தரவில்லை.. ஆதித்யநாத் காவி உடைக்குள் ஔிந்துள்ள பச்சையான அரைபிளேடு.. கோரக்பூர் மடம் அப்பகுதியை இந்தியாவிடமிருந்து சுமார் 50 ஆண்டுகள் பினனால் அழுத்தி வைத்திருக்கிறது.. மடம் மாமூல் வசூலிப்பது முதல் ஒரு மாபியா செய்யும் அத்தனை அண்டர்கிரவுணட் வேலையும் செய்கிறது.. ஆனால் சங்கிப்பயல்களும், ஷோகால்டு நடுநிலைகளும், ஆதித்யநாத்தை வாயில் நுரைதள்ள தாங்கிப்பிடிப்பது சேதாரம் பலமாக உள்ளதை காட்டுகிறது...
உ.பி இன்னும் பல சீரழிவுகளுக்குள்ளாகும் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.. ஆனால் பரிவாரங்கள் நிலைதடுமாறுகின்றன .. அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அடையும் பதட்டம் அதை உறுதிப்படுத்துகிறது.. பக்தாள் காங்கிரஸை குறைகூறி பாடும் வசைகள் பசையற்ற போஸ்டர்களைப்போல காற்றில் பறக்கின்றன.. இவை சாதாரணர்களை கடுமையாக கோபப்படுத்துகிறது.. மோடியின் ஆளுகையில் தேசம் ஒரு மனநோய் விடுதி என்றால் ஆதித்யநாத்தின் ஆளுகையில் உ.பி ஒரு பிணவறையைப்போல இருக்கிறது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக