வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

கோக் பெப்சிக்கு மட்டும் 24 மணி நேரமும் தண்ணீர் சப்ளை எப்படி? வளர்மதி வினா

பல்கலைக்கழக விதிகளை மீறி நான் எதுவும் செய்யவில்லை. துண்டறிக்கை கூட வெளியில் தான் வழங்கி இருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் யாரையும் இடைநீக்கம் செய்யவில்லை. ஆனால் நெடுவாசல், கதிராமங்கலத்திற்கு ஆதரவாக போராடிய என்னையும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களையும் இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அரசு தனக்கு எது எல்லாம் சாதகமாக இருக்கிறதோ அதை எல்லாம் பயன்படுத்திவிட்டு, தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை நசுக்க நினைக்கிறது. நான் படித்ததே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான். அதனால் இந்த இடைநீக்கத்தால் எதிர்காலம் பாதிக்கப்பட்டதாக நினைக்கவில்லை. இங்கு எவ்வளவுதான் வறட்சியாக இருந்தாலும் கோக், பெப்சி போன்ற பல நிறுவனங்களுக்கு எந்தவிதமான தடையும் இன்றி 24 மணி நேரமும் தொடர்ந்து தண்ணீர் தரப்பட்டு வருகிறது. குறிப்பாக வெயில் காலத்தில் மட்டும் அதிக அளவில் குளிர்பானம் தயாரிக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வாரிக் கொடுத்துவிட்டு பருவ மழையைக் காரணம் காட்டி பொய்யாக பரப்புரை செய்கிறது. (மேலும் விரிவாக இன்றைய நக்கீரனில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக