செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

17 வயது இளம்பெண் தெருவில் குழந்தை பெற்ற கொடுமை ... ஜார்கண்ட்

ஜார்கண்ட் மாநிலத்தின் சாராகிலா மாவட்டத்தை சேர்ந்த ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 17வயது சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ண ராம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது பழக்கம் நெருக்கமாகவே பிரியா கற்பமாகியுள்ளார். இதை அறிந்த அவரது காதலர் ப்ரியாவை சந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார். ப்ரியா கற்பமாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோரும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதனால் சுமார் 4 மாதங்கள் தங்க வீடு இன்றி ப்ரியா தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார். பின்னர் நிறைமாத கர்ப்பிணியான பிரியா அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். ஆனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பிரியாவை சுகாதார நிலையத்தில் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் மீண்டும் தங்க இடமின்று தவித்த பிரியா கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அதிகாலை 7 மணியளவில் தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்பகுதியில் இருந்த யாரும் ப்ரியாவிற்கு உதவ முன்வரவில்லை. பின்னர் அந்த வழியாக சென்ற ஓம் பிரகாஷ் என்பவர் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் இருந்த தாயையும் குழந்தையையும் ஒரு ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் நலமாக இருப்பதாக ஓம் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடுதெருவில் வலியால் துடித்து கொண்டிருந்த ப்ரியாவிற்கு உதவ யாரும் முன்வராத புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மனிதநேயம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக