சனி, 5 ஆகஸ்ட், 2017

15-வது குடியரசு துணைத்தலைவரானார் வெங்கய்ய நாயுடு!

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார். குடியசு துணைத்தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்கட்சி சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் 98.2% வாக்குப்பதிவு ஆகியிருந்தன. மொத்தமுள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து வெங்கய்ய நாயுடு முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்று நாட்டின் 15வது குடியரசு துணைத்தலைவராக வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் 516 பேர் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.272 வாக்குகள் வித்தியாசத்தில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். வெங்கய்ய நாயுடுவை எதிர்த்து போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் . நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக