திங்கள், 28 ஆகஸ்ட், 2017

குர்மீத் ராம் ரஹீம் ..10 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிபதி முன்னால் மன்னிப்பு கோரி கண்ணீர் சிந்தினான்

இந்த திருட்டு சாமியார் காலை நக்காத பிஜேபி லீடரே இல்ல !
.... இப்போ சத்தம் போடாம ட்வீட்டை டெலிட் பண்றானுங்க...தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் 
 பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து, நீதிபதியின் முன்னால் மன்னிப்பு கோரி குர்மீத் கண்ணீர் விட்டு அழுதார். பாலியல் வழக்கில் கைது< தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம், சிர்ஸாவில் உள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே அறிவித்தபடி பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் குக்கான தண்டனை விவரம் இன்று வெளியிடப்பட்டது. இதற்காக பஞ்ச்குலா சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக் சிறைக்குச் சென்றார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் தண்டனை விவரத்தை அவர் அறிவித்தார். இதையடுத்து குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

> 'குறைந்தபட்ச தண்டனையே வழங்கவேண்டும்'</> இந்நிலையில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், நீதிபதியின் முன்னால் நடந்த இருதரப்பு வாதத்தில், குர்மீத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் குர்மீத் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சமூக சேவையில் ஈடுபடுபவர் என்பதையும் அவரின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அவருக்கு மிகக் குறைந்தபட்ச தண்டனையே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே குர்மீத் ராம் ரஹீம் சிங் மன்னிப்பு கோரி, நீதிபதியின் முன்னால் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது. tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக