ஞாயிறு, 9 ஜூலை, 2017

எல்லா சாதியையும் படிக்க வைத்த Thomas Babington Macaulay மெக்காலே ... அதனால்தான் அவா அவரை திட்டுகிறார்கள்!

Sivasankaran.Saravanan86: மெக்காலே கல்வி முறை சிறந்ததா இல்லையா என்ற
வாதம் நீண்ட நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கல்வி கற்கவேண்டும் என்பதே மெக்காலே கல்வித்திட்டம். இந்த ஒரேயொரு காரணத்தை வைத்துக்கொண்டே மெக்காலே கல்வித்திட்டம் மிகச்சிறந்தது என சொல்லிவிடலாம்.
என்னவோ மெக்காலே வருவதற்கு முன்னால் இங்கே பூரா பேரும் ஸ்காலர்களாக இருந்தது போல ரீல் சுற்றுவதெல்லாம் சுத்த புருடா. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அரசாங்க வேலையில் இருந்த 90 சதவீதம் பேர் பிராமணர்கள். ஏனென்றால் அவர்கள் தான் படித்திருந்தார்கள். அவர்களுக்கு மட்டுமே படிக்கிற வாய்ப்பை நமது சமூக கட்டமைப்பு வழங்கியிருந்தது. So, NEET Exam போல தகுதித்தேர்வுலாம் கூட தேவையில்லை. ஜஸ்ட் எவன்லாம் எழுத படிக்க கூட்டல் கழித்தல் கணக்கு போடத் தெரிஞ்சு வச்சிருந்தானோ அவனுக்கெல்லாம் கவர்ன்மென்ட் வேலை தேடி தேடி வந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மெக்காலே இந்தியர்கள் அனைவரும் படிப்பதற்கான கல்வி முறையை கொண்டுவந்தார். வெள்ளைக்காரர்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் வராமல் இருந்திருந்தால் நாம் கல்வியில் குறைந்தது நூறாண்டுகள் பின்னோக்கி இருந்திருப்போம் .
Vardhini Jayaraman Even now after reservation , job opportunities in public sector companies are given through indirect means through unions which are predominately brahministic

நமது முன்னோர்கள் எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தார்கள் என்பதற்கு ஒரேயொரு உதாரணம் மட்டும் சொல்லி முடிக்கிறேன். 1925 ம் ஆண்டு வரை சென்னையின் புகழ்பெற்ற பச்சையப்பன் கல்லூரியில் பட்டியல் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க அனுமதியில்லை. இந்த லட்சணத்தில் தான் இங்கே இருந்தது. (இணைப்புத் தகவல் : 1927ம் ஆண்டு அதே பச்சையப்பன் கல்லூரியில் நடந்த முதல் ஆதிதிராவிடர்கள் நல மாநாட்டின் தலைவராக திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த மாநாட்டில் தான் முதன்முறையாக பட்டியல் வகுப்பினருக்கென தனித் தொகுதி பிரதிநிதித்துவம் வேண்டுமென்ற வரலாற்றுச்சிறப்புவாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது) .
எனவே இந்த மக்களின் மீது அக்கறையும் அன்பும் கொண்ட எவரும் மெக்காலே கல்வித்திட்டத்தை குறை சொல்ல முடியாது. எல்லா சாதிக்காரனும் படிச்சுட்டாங்களே என்ற பொச்சரிப்பு உள்ளவர்களால் தான் மெக்காலே வை குறைசொல்ல முடியும்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக