வெள்ளி, 21 ஜூலை, 2017

சிவாஜி கணேசனை இழிவு படுத்தி ஒரு நினைவஞ்சலி .. News 7 தொலைகாட்சியின் தமிழர் விரோதம்!

NEWS 7 Tamil ல் இன்று மாலை 5.30 மணிக்கு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவஞ்சலி என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது ...
அதில்
சிவாஜி அவர்களின் நடிப்பாற்றல் பற்றியோ
திரையுலகில் அவர் நிகழ்த்திய சாதனைகளை பற்றியோ
அவர் பெற்ற விருதுகள் பாராட்டுகள் பற்றியோ
அவரது பெருமைகள், மாண்புகள் பற்றியோ..
அவரது தனிப்பட்ட குண நலன்களை பற்றியோ
ஒரே சொல்லில்...
அவரது தனி சிறப்புகளை பற்றியோ எதைப்பற்றியுமே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ...மாறாக...

ராஜிவ் காந்தியால் மூப்பனாரால் ஒதுக்கப்பட்டார்
காங்கிரசில் செல்வாக்கு இழந்தார்...
வேறு வழி இன்றி எம்ஜிஆர் கு ஆதரவு தந்தார் ...ஜானகியோடு கூட்டணி வைத்தார்.
அவருடைய சாதி மக்கள் கூட அவரை ஆதரிக்கவில்லை..
திருவையாறில் போட்டியிட்டு தோற்றார்...அரசியல் வெறுத்துவிட்டார் முடங்கிப்போனார்...

கடைசி வரை அவருக்கு Success கிட்டவே இல்லை ...என்று
சிவாஜியை எவ்வளவு இழிவு படுத்தமுடியுமோ எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்க படுத்தியது அந்த தமிழின விரோத சானெல்
யார் அந்த கட்டுரையாளர்.?
சிவாஜி மீது அந்த சானலுக்கு அப்படி என்ன பகை ?
சிவாஜியை பற்றி அந்த நாய்க்கு என்ன தெரியும் ?
உலகத்தில் நிகரற்ற ஒரு வானுயர் கலைஞனை எப்படி இவ்வளவு கேவலமாக அவமானப்படுத்தலாம் ?
இது ஒவ்வொரு தமிழனுக்கும் செய்யப்பட பெரிய அவமானம்
இது போல அந்த நாயால் கன்னடத்தில் ராஜ் குமாரையோ
தெலுங்கு என்டிஆரையோ இழிவு படுத்திவிட்டு அங்கே தெருவில் நடமாட முடியுமா ?
தமிழனை யார் செருப்பால் அடித்தாலும் தமிழர்களுக்கு சொரணை வராது...மேலும் அதை நியாயப்படுத்துவான்.
ஆகவே தான் தமிழர்கள் எல்லா இடங்களிலும் அடித்து துரத்தப்படுகிறார்கள்.
மானமுள்ள தமிழர்கள் அந்த சானலை மன்னிப்பு கேட்க சொல்லவேண்டும்
குறிப்பாக நம் அரசியல் கட்சித்தலைவர்கள் அந்த சானலுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கவேண்டும்...  Damodaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக