புதன், 5 ஜூலை, 2017

Nasa மூன்று கறுப்பின பெண்களின் உதவியோடுதான் முதல் விண்வெளி பயணம் ...

Shalin Maria Larwrence :  Hidden figures என்றொரு ஆங்கில படம்
.உண்மை சம்பவங்களை கதையாக
கொண்டது .
1961 அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமை போராட்டம் (Civil rights war ) உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் . கறுப்பின வெறுப்பும் உச்சத்தில் இருந்த நேரம் மூன்று கறுப்பின பெண்கள் நாசாவில் சேருகிறார்கள் .
வரலாறில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் யார் வல்லரசு என்று தீவிரமாக "விண்வெளி பந்தயம்" நடந்து கொண்டிருக்கும் காலம் அது . ரஷ்யா விண்வெளிக்கு மனிதனோடு விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்டிருந்த நேரம் .அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிகிறது .
அந்த மூன்று கறுப்பின பெண்களில்
ஒருத்தி கணித மேதை -கேத்தரின்
ஒருத்தி பொறியியல் அறிவாளி -மேரி
இன்னொருத்தி computers என்று அழைக்கப்படும் வானியல் கணக்குகளை கையாலேயே போடும் கறுப்பின பெண்களுக்கு சூப்பர்வைசர் -டாரத்தி .
அமெரிக்காவின் ஆள் தாங்கிய விண்வெளி பயணத்தை வெற்றி ஆக்குவதற்கு கேத்தரின் மற்றும் மேரியின் உதவி தேவை படுகிறது . முழுதும் வெள்ளையர்கள் இருக்கும் குழுக்களில் அவர்கள் இணைக்கப்படுகிறார்கள் .
அந்த குழுக்களிலேயே அவர்கள் சிறந்து விளங்குகிறாரகள் .வெள்ளையர்களை விட எல்லா விதத்திலேயும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் .

அதுவரை கறுப்பினமக்களுக்கென இருக்கும் தனி கழிவறை ,தனி குடிநீர் ,நிற பாகுபாடு சம்பந்தப்பட்ட விஷயங்களை எதிர்த்து கேத்தரின் கேள்வி கேட்கிறார் .அவருக்காக காலம்காலமாக இருந்து வந்த இன பாகுபாடு கட்டமைப்புகள் அத்தனையும் அவரின் வெள்ளைக்கார முதலாளியே அடித்து நொறுக்கிகிறார் . நாசாவை இன பாகுபாடற்ற சமத்துவ பணிஇடமாய் மாற்றுகிறார் .நாசா வரலாற்றில் முதல் முறையாக .
மேரி விண்கல வடிவமைப்பில் பங்கேற்க அவருக்கு பொறியியல் பட்டம் அதுவும் வெள்ளையர்களால் நடத்தப்பட்டு கறுப்பினத்தவர் நுழைய கூட முடியாத ஒரு பல்கழலை கதகத்தில் இருந்து வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது . விஷயத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லுகிறார் ,வெள்ளை நீதிபதியிடம் நாசாவில் தன் பங்கு எவ்வளவு முக்கியம் ,அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு அவர் எவ்வளவு முக்கியம் என்று வாதிடுகிறார் .அதுவரை பெண்களுக்கும் ,கறுப்பினத்தவருக்கும் அனுமதியளிக்காத விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அவருக்கு இடம் கிடைக்கிறது .வரலாற்றில் முதல் முறையாக .
முதல் முறையாக முதல் தலைமுறை இயந்திர கம்ப்யூட்டர் ஒன்றை நாசா வாங்குகிறது . ஆனால் அதை இயக்க யாருக்கும் தெரியவில்லை .டாரத்திக்கு அதை வேலை செய்ய வைக்க முயற்சிக்கிறார் . கறுப்பினத்தவரான அவருக்கு அங்கே செல்ல அனுமதி இல்லை .இருந்தும் யாருக்கும் தெரியாமல் அதை சாரையாக இயக்குகிறார் .அப்படியே அதின் ப்ரோக்ராமிங் பற்றி கற்று கொள்ள துவங்குகிறார் . அப்பொழுது இருந்த அமெரிக்காவில் பொது நூலகத்தில் கூட கறுப்பினத்தவருக்கு சில முக்கிய புத்தகங்களை படிக்க அனுமதி இல்லை .டாரத்தி அந்த புத்தகங்களை திருடி படிக்கிறார் ,ப்ரோக்ராமிங் அறிவில் தேர்ச்சி பெறுகிறார் தன் கீழ் வேலை செய்யும் அத்தனை கறுப்பின பெண்களுக்கும் பயிற்சி அளிக்கிறார் . இதனை கண்டுபிடித்தவுடன் நாசா டாரத்தியை கம்ப்யூட்டர் துறைக்கு சூப்பர்வைசர் ஆக்குகிறது அந்த பெண்களையும் அந்த துறையில் நிரந்தர பணியாளர் ஆக்குகிறது .வரலாற்றில் முதல் முறையாக .
இந்த மூன்று கறுப்பின பெண்களின் உதவியோடு நாசா தன் முதல் ஆள் கொண்ட விண்வெளி பயணத்தை வெற்றிகரமாய் முடிக்கிறது . வரலாற்றில் முதல் முறையாக .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக