வியாழன், 13 ஜூலை, 2017

டி ஐ ஜி ரூபா முட்கள் ... சசிகலா சிறை வசதிகளை கண்டுபிடித்த கர்நாடக சிறைதுறை DIG


BENGALURU: Deputy Inspector of General (Prisons) D Roopa on Wednesday kicked up a storm by accusing her superior officer, Director General of Police (Prisons) K Sathyanaranaya Rao, of interfering in her work ever since she took charge. ..
ராகினி ஆத்ம வெண்டி மு. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை வசதிகள் விதிமுறைகளை மீறி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. 2014-ம் ஆண்டு இதே வழக்கில் பெங்களூருவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா உள்பட 3 பேருக்கும் சிறைத் தண்டனை
விதித்து தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா முதல்வராக பதவியில் இருந்ததால், பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல்வகுப்பு வசதி அளிக்கப்பட்டது. ஜெயலலிதா சிறையில் அனுபவித்த அனைத்து சலுகைகளும் சசிகலா உள்ளிட்டோருக்கும் கிடைத்தது. ஆனால், இந்த முறை சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சிறையில் எந்தச் சலுகையும் வழங்கப்படவில்லை.

ஆனால், சமீப காலமாக சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் விதிமுறைகளை மீறி செய்து கொடுக்கப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு விதிமுறை மீறி தனி சமையலறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் சிறைத்துறையில் பதவியேற்றிருக்கும் முதல் பெண் அதிகாரியான ரூபாவுக்கு, கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணா சிறையில் திடீர் சோதனை நடத்தியதற்கான காரணம் குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக