ஞாயிறு, 16 ஜூலை, 2017

charu nivedha: :முகநூலில் படித்த ஒரு பெண்ணின் டயரி. எழுதியவர் லுலு தேவ ஜம்லா

குளிக்காத கழுதைகள்
நேத்திக்கு ஆப்பீஸ் லிஃப்ட்டுக்குள்ள ஏறினா, கருமம் ஒரே நாத்தம்… அப்டியே குடலை புரட்டிகிட்டு வந்திச்சு… ஏன்னா லிப்டுக்குள்ள ஒரு குளிக்காத கும்பல் நின்னுகிட்டிருந்திச்சி… லிஃப்ட்டை விட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தான் மூச்சே விட்டேன்! அப்பதான் எனக்கு இத பத்தி எழுதினா என்னன்னு தோணிச்சி…
இங்க பழங்குடியின மக்கள் பலரும் வீடுகள்ள குடியிருக்காம ஊரு ஊரா அலைஞ்சிகிட்டே இருப்பாங்க… நம்ம ஊர் நாடோடிகள் மாதிரி… அவுங்களை இங்க long grassers அப்டீன்னு சொல்லுவோம்… அவுங்க lifestyle ல குளிக்கிறதுங்கிற பழக்கமே இருக்காது… அவுங்க நம்மள கடந்து போயி 5 நிமிஷம் ஆனாலும் அவுங்களோட கந்தம் அந்த இடத்த விட்டு போகாது… அந்த நற்கந்தத்தை நாம தான் உணர்ந்து மூக்கை பொத்திக்குவோமே ஒழிய, அவுங்ககிட்ட நீ நாறுற அப்டீன்னு சொல்ல மாட்டோம்! அவுங்களும் அந்த நாத்தத்தை ஒரு போதும் உணருறதே இல்ல! அப்டி யாராச்சும் அவுங்க நாத்தத்தை பத்தி சொன்னா அவுங்களை இவ யாருடா கிறுக்கச்சி பெனாத்துறான்னு பார்ப்பாங்களா இல்லியா?

ஏன் இத சொல்றேன்னா… சாதி அப்டீங்கிற ஒரு சாக்கடையிலயே வாழ்ந்து பழகிட்டவங்களால அந்த நாத்தத்தை உணர முடியிறதில்ல! அதை விட்டு வெளிய வந்தா தான் அந்த நாத்தம் நம்ம மூக்கை துளைக்கும்! அப்போ நாம இன்னும் அங்கயே பன்றி மாதிரி புரண்டுகிட்டு இருக்கிறவங்க கிட்ட… டேய் வெளிய வாங்கடா…. அது நாறுதுடான்னு… சொன்னோமுன்னா சரி இவ சொல்றதை செஞ்சி தான் பார்ப்போமே அப்டீங்கிறவன் வெளிய வர முயற்சி பண்ணுவான்… ஆனா அங்க கிடந்து சுகம் கண்டவன் என்ன பண்ணுவான்… ஒண்ணு அங்க ஏற்கனவே அவன் கூட சொகுசா இருக்கிறவங்க வெளிய போயிர கூடாதுன்னு (போனா அவுங்களுக்கு கம்பெனிக்கு ஆளில்லாம போயிரும்ல) அவங்களை புடிச்சு வைக்க பார்ப்பான்! அதுக்காக சாக்கடை நாறுதுன்னு சொல்லுற உன் வாயை மூட பார்ப்பான்… முடியலைன்னா உன்னையும் அந்த சாக்கடைக்குள்ள இழுத்து விட பார்ப்பான்… ஒண்ணும் இல்லன்னா அட் லீஸ்ட் உன் மேல சாக்கடைய தெளிச்சு விடவாவது பார்ப்பான்… இது எதுக்குமே அசராம நாம நின்னு கத்திகிட்டே இருந்தோம்னா… அவனால முடிஞ்ச அளவுக்கு நமக்கு குடைச்சல குடுத்துகிட்டே தான் இருப்பான்! அதையெல்லாம் கண்டுக்காம கடந்திட்டோம்னா… நாம கெத்து… இல்லன்னா வெத்து!
இதே விஷயம் பாலின சமத்துவமில்லாத சமூகத்திற்கும் பொருந்தும்…!
சரி நான் சொல்ல வந்தது இதெல்லாம் இல்லப்பா… நான்லாம் மாசத்துல நாலு நாள் தான் குளிக்கிறதே… சோம்பேறித்தனம் தான்… அப்புறம் saving time to update status on Facebook… ஆனா வெளிய எப்டி சொல்லிக்கிறது… saving water அப்டீன்னு… எனக்கு எப்பயுமே என்னோட நாத்தத்தை உணர முடிஞ்சதே இல்ல… ஆனா அதோட பாதிப்பால ஊர்ல இருந்த கரப்பான் பூச்சியெல்லாம் செத்து போச்சின்னு சொல்லி தான் என்னை இந்தியாவில இருந்தே நாடு கடத்திட்டாங்க அப்டீன்னு சமீபத்துல தான் நான் தெரிஞ்சிகிட்டேன்! ஆனாலும் நான் என்னை மாத்திகிட்டேனா? இல்லீல்ல? ஏன்? குளிக்காம இருக்கிறது என்னோட உரிமை! அதை நான் யாருக்காவும் மாத்திக்கப் போறதே இல்லன்னு தீர்மானிச்சிட்டேன்! உனக்கு நாறுதுன்னா ஒண்ணு நீ மூக்க பொத்திக்க… இல்லன்னா நான் இருக்கிற பக்கமே வராம ஒதுங்கி போ! அத விட்டுட்டு நீ எழுதுறது நாறுது அப்டியெல்லாம் எழுதாத அப்டீன்னு எதுக்கு கொடி புடிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறங்கிறேன்! வேணும்னா நீ குளிக்காம இருந்து பாரேன்… அந்த சுகமே தனி தெரியுமா?
ஆனா பாவம் எங்க ஊட்டுகாரு தான்… நல்லா சொல்லி பார்த்திட்டாரு… டெய்லி இல்லாட்டியும் ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டியாவது குளின்னு… ஆங் நாம தான் யார் நல்லது சொன்னாலும் கேட்டுக்காத தறுதலை ஆச்சே… கண்டுக்கிறதே இல்ல! சரின்னு இப்ப அவுரும் சொல்றதை நிப்பாட்டிட்டு செண்டு பாட்டிலுக்கும் டியோடரண்ட் ஸ்ப்ரேக்கும் காசு அழுது தொலைக்கிறாரு……
நான் இப்போ சொன்னதெல்லாம் அக்மார்க் உண்மைன்னாலும் நீங்க எல்லாம் நம்பவா போறீங்க? ஏன்னா உங்க மனசில ச்சே லுலு எல்லாம் இப்டி சோம்பேறியா இருப்பாங்களா? அவுங்க தான் ஓடி ஓடி உழைக்கிறவங்க ஆச்சே அப்டீன்னு ஒரு இமேஜ் இருக்குமுல்ல! அதையும் தாண்டி என்னை நம்புனீங்கன்னா ஒண்ணு நீங்களும் என் இனமா இருக்கணும்… இல்லன்னா… நீங்க வேற்று கிரக வாசியா தான் இருக்கணும்!
பெரிசா நான் குளிக்காதத கெட்ட வார்த்தை பேசுறதை ஒழுங்கா துணி போடாததையெல்லாம் தப்பு சொல்ல வந்துட்டானுங்க.. ஆமா சாதி அப்டீங்கிற மனித மலத்தை எல்லாம் பேருல லாஸ்ட் நேமா வச்சிகிட்டு அலையிறத பெருமைன்னு நம்பிகிட்டு இருக்கிறப்பயும், நாம அடிமை பட்டு கிடக்குறோம்னே உணராத பெண்கள் இன்னும் அதை காதல், தாய்மை தியாகம்னு நம்பி சுதந்திர வாழ்க்கையையே தொலைச்சிகிட்டு இருக்கிறப்பயும்… நான் குளிக்காம அலையிறது மட்டும் தான் தப்பாக்கும்? ம்க்கும் 😏😏
இப்ப ஏதாச்சும் யார் மண்டைலயாவது ஏறிச்சா? இல்லீல்ல? ஏறாது ஏன்னா நீ குளிக்கிற சாதி, நான் குளிக்காம செண்டு பூசிகிட்டு அலையுற சாதி.. அம்புட்டு தான்!
இப்படிக்கு,
குளிக்காத நாத்தம் புடிச்ச கழுதை
லுலு தேவ ஜம்லா
25/05/2017
பிகு:- இந்த பதிவுக்கும் பெண்ணியத்துக்கும் எந்த சம்மந்தமுமில்லை! எனவே இதில் உங்கள் அதிமேதாவித்தன கருத்துக்களை கொட்டி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறீர்கள்! அப்டி கொட்டினாலும் எனக்கு ஒரு மசிரும் இல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக