வெள்ளி, 21 ஜூலை, 2017

அமெரிக்கா சிரியா போராளி குழுக்களுக்கு இனி ஆயுதம் வழங்காது! அதாவது இனி ஐ எஸ் க்கு ஆயுதம் கிடைக்காது!

ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்த சிரியாவில் அரசுப்படைகளுக்கு எதிராக போரிட்டு வரும் போராளிக்குழுகளுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய போராளிக் குழுக்களுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு வாஷிங்டன்: ரஷ்யாவுடனான உறவுகளை மேம்படுத்த சிரியாவில் அரசுப்படைகளுக்கு எதிராக போரிட்டு வரும் போராளிக்குழுகளுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. போராளி இயக்கங்களுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகளை செய்து வருகின்றன.


அதேபோல அரசுப்படையினருக்கு ஆதரவாக ரஷ்யா உதவிகள் செய்து வருகின்றன. இந்நிலையில், சிரியாவில் அமைதி திரும்பவும், ரஷ்யாவுடனான ராஜீய உறவுகளை மேம்படுத்தவும் அமெரிக்கா சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபடியாக போராளிக்குழுக்களுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயுதம் வழங்கியும் போராளி குழுக்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறவில்லை என்பதும் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்க அனுமதி கொடுத்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டில் துவங்கிய போர் சிறிய அளவிலான வெற்றிகளையே அமெரிக்காவுக்கு கொடுத்துள்ளது. இதனால் இதனை நிறுத்த தற்போதைய அதிபர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தென் மேற்கு சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய டிரம்பும், புடினும் பேச்சு நடத்துவதற்கு முன்பே இது பற்றி முடிவு செய்யப்பட்டதாக அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக