புதன், 26 ஜூலை, 2017

துரோகத்தின் மறுபெயர் நிதீஷ்குமார்...

Further, Lalu showed some papers alleging Nitish Kumar was facing a murder case dated 31 August 2009 by a lower court in Barh. The RJD leader accused Nitish of influencing the Judge for the proceedings against him. "Now this case is in Patna High Court. Nitish knew that the court can summon him any day", Lalu said. தன் கட்சியை விட குறைந்த அளவு எம்எல்ஏகளையே நிதிஷ் பெற்ற போதும் அவர் முதல்வராக லாலு ஆதரவு தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் ஜனாதிபதி தேர்தலின் போதும் பாஜகவுக்கு ஆதரவளித்து கூட்டணி தர்மத்தை மீறியவர் நிதிஷ்., அப்போதும் பொறுமை காத்தார் லாலு.
பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த லாலு ஆட்சியில் ஊழல் என கூறி இப்போது சிபிஐ சோதனை நடத்தியதும் அதுவும் அந்த காலகட்டத்தில் சிறுவனாக இருந்த லாலுவின் மகனும் தற்போதய துணை முதலமைச்சருமான தேஜஸ்வியை அந்த வழக்கில் இணைத்து அவரது வீட்டையும் சோதனை நடத்தியதும் அதற்காக அவரை ராஜீனாமா செய்ய சொன்னதும் நிதிஷ் மற்றும் பாஜகவின் கூட்டு சதியே, திட்டமிட்ட நாடகமே. எப்படியாவது லாலுவை கழற்றிவிட்டு பாஜகவுடன் கூட்டணி போட காரணங்களை உருவாக்கி இப்போது ராஜினாமா செய்திருக்கிறார் நிதிஷ்.

மாஞ்சியை வைத்து கட்சியை உடைத்து நிதிஷுக்கு பாஜக ஆட்டம் காட்டிய போது துணையாக வந்த லாலுவுக்கும் மதசார்பற்ற மெகா கூட்டணிக்கும் இப்போது கடுமையான துரோகத்தை செய்திருக்கிறார் நிதிஷ்.
விபிசிங் பிரதமராக இருந்த போது பீகார் முதல்வராக இருந்தவர் லாலு.
அப்போது அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து அவரை கைது செய்தவர் லாலு. இதன் காரணமாகவும் மண்டல் கமிஷன் காரணமாகவும்தான் விபிசிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அப்போதிருந்து இப்போது வரை பாஜகவுடன் கூட்டணி வைக்காத ஒரே மாநில கட்சி லாலுவின் கட்சி மட்டும்தான். சிறுபான்மையினருக்கு எப்போதும் நம்பகமானவராக இருப்பவர் இவர்மட்டும்தான்.
ரயில்வே அமைச்சராக இருந்த போது கட்டணங்கள் உயர்த்தாமல் ரயில்வே துறையை லாபத்தில் நடத்தி காட்டியவர் லாலு.
துரோகிகள் இப்போது வாழலாம். எப்போதும் இது போல வாழ இயலாது. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். அடுத்த தேர்தலில் கடுமையான பாடத்தை நிதிஷ் கற்பார்.
இதற்கான பலனை நிச்சயம் அவர் அறுவடை செய்வார். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
Rajkumar Vijayakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக